'சர்தார் 2' படப்பிடிப்பில் உயிரிழப்பு..!

  • IndiaGlitz, [Wednesday,July 17 2024]

கார்த்தி நடித்து வரும் ’சர்தார் 2’படத்தின் படப்பிடிப்பில் விபத்து நடந்ததாகவும் இந்த விபத்தில் பிரபல ஸ்டண்ட் கலைஞர் ஒருவர் 20 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்த போது படுகாயம் அடைந்து உயிரிழந்ததாகவும் கூறப்படுவது திரை உலகினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கார்த்தி நடிப்பில் பிஎஸ் மித்ரன் இயக்கத்தில் உருவான ’சர்தார்’ திரைப்படம் கடந்த 2022 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும் இந்த படம் ரூ.100 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ’சர்தார் 2’படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியான நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகிறது. மேலும் இந்த படத்தில் எஸ்ஜே சூர்யா இணைந்ததாக நேற்று தான் அறிவிப்பு வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த படத்தின் ஸ்டண்ட் காட்சியின் படப்பிடிப்பில் பிரபல ஸ்டண்ட் கலைஞர் ஏழுமலை என்பவர் நடித்துக் கொண்டிருந்தார். அவர் 20 அடி உயரத்தில் இருந்து குதிக்கும் காட்சி படமாக்கப்பட்ட போது திடீரென விபத்து ஏற்பட்டதாகவும் இந்த விபத்தில் ஏழுமலைக்கு மார்பு பகுதியில் காயமடைந்ததாகவும் அதுமட்டுமின்றி நுரையீரலில் ரத்தக் கசிவு ஏற்பட்டதால் சிகிச்சையின் பலனின்றி உயிரிழந்ததாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து விருகம்பாக்கம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

More News

ரிஷப ராசிக்கு வரப்போகும் தன லாபம்..! ஆடி முதல் பங்குனி வரை ஜோதிட பலன்கள் | Prakash Narasimhan

ரிஷப ராசி நேயர்களுக்கு நிதி நிலை:

மேஷ ராசிக்கு லாபம் கொட்டுமா.? ஆடி முதல் பங்குனி வரை ஜோதிட பலன்கள் | Prakash Narasimhan

வேத ஜோதிட கலை நிபுணர் திரு. பிரகாஷ் நரசிம்ஹன் அவர்கள், ஆன்மீகக்ளிட்ஸ் யூடியூ சேனலில் அளித்திருக்கும் இந்த காணொளியில்,

சூர்யா நடிக்க இருந்த படத்தில் சிவகார்த்திகேயன்.. தனுஷ் ஏமாற்றமா?

சூர்யா நடிக்க இருந்த திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க இருப்பது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் தனுஷ் தரப்பு ஏமாற்றத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.

காட்டுல ஆபத்தான மிருகம் சிங்கம் இல்லை.. ஓநாய் ஸ்கெட்ச் போட்டா சிங்கத்தையே வீழ்த்திடும்: 'ராயன்' டிரைலர்..!

தனுஷ் நடித்த 'ராயன்' திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து வரும் 26 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் டிரைலர் சற்று முன் இணையத்தில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது.

🔮உச்சி முதல் உள்ளங்கால் வரை நோய் இல்லாமால் வாழ சக்தி வாய்ந்த சித்தர் மந்திரம்.!

ஆன்மீகக்ளிட்ஸ் யூடியூ சேனலில், பிரபல சித்தர் மருத்துவர் கிரிமாஸ்டர் நாராயண சுவாமிகள் அவர்களுடனான காணலை தவற விடாதீர்கள்!