சினிமாவில் சொன்னதை நிஜ வாழ்க்கையில் கடைபிடிக்க மறுத்த சுசாந்த் சிங்!

  • IndiaGlitz, [Sunday,June 14 2020]

Image Courtesy : Yotainment

பிரபல பாலிவுட் நடிகர் சுசாந்த் சிங் சற்றுமுன் தனது வீட்டில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்ட அதிர்ச்சியான செய்தியை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் பாலிவுட்டில் பிரபல நடிகராக இருந்தாலும் தனிப்பட்ட வாழ்க்கையில் பல்வேறு பிரச்னைகளைச் சந்தித்து வந்ததால் கடந்த சில நாட்களாக மன அழுத்தத்தில் அவர் இருந்துவந்ததாக தெரிகிறது. இந்த மன அழுத்த்தத்திற்காக மருத்துவரிடம் தொடந்து சிகிச்சை எடுத்து வந்ததாகவும் கூறப்படுகிறது

கொரோனா ஊரடங்கால் பாலிவுட் திரையுலகம் கடந்த மூன்று மாதங்களாக முடங்கியிருக்கும் நிலையில் திடீரென சுஷாந்த் தனது வீட்டில், தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார். சுசாந்த் தான் நடித்த chhichhore என்ற படத்தில் ’தோல்வியை ஏற்று கொள்ளும் பக்குவம் வேண்டும் என்றும் தற்கொலை ஒருபோதும் தோல்விக்கு தீர்வாகாது என்றும் வசனம் பேசியிருப்பார். ஆனால் அந்த வசனத்தில் உள்ளதை அவர் சொந்த வாழ்க்கையில் கடைபிடிக்காமல் ரசிகர்களையும் குடும்பத்தினர்களையும் மீளாத்துயரில் ஆழ்த்திவிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

சினிமாவில் மற்றவர்களுக்கு அறிவுரையாக சொன்னதை அவர் கடைபிடிக்கவில்லை என்றாலும் அவரது ஆன்மா சாந்தியடைய அவரது ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.