ரஜினியுடன் இஸ்லாமிய பிரமுகர் சந்திப்பு: சிஏஏ குறித்து பேச்சுவார்த்தை?
Send us your feedback to audioarticles@vaarta.com
குடியுரிமை சீர்திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் இஸ்லாமிய அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். சென்னையிலும் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக வண்ணாரப்பேட்டையில் சிஏஎ சட்ட எதிர்ப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இஸ்லாமிய அமைப்பினர்களை நேரடியாக சந்தித்து பேச ரஜினிகாந்த் முடிவு செய்ததாக வெளிவந்த செய்தியை நேற்று பார்த்தோம். குடியுரிமை சட்டத்தை எதிர்த்து போராடும் போராட்டக்காரர்களிடம் குடியுரிமை சட்டத்தை ஆதரித்து பேசும் ரஜினிகாந்த் பேச்சுவார்த்தை நடத்த இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த பேச்சுவார்த்தை இன்று அல்லது நாளை நடைபெறலாம் என்ற செய்தி வெளியான நிலையில் இன்று போயஸ் கார்டனில் ரஜினிகாந்துடன் தமிழ்நாடு ஹஜ் கமிட்டி தலைவர் அபுபக்கர் நேரில் சந்தித்து பேசியுள்ளார். குடியுரிமை திருத்த சட்டத்தால் இஸ்லாமியர்களுக்கு பாதிப்பு இருப்பதாக ரஜினியிடம் அபூபக்கர் விளக்கம் அளித்ததாகவும் ரஜினியும் தனது தரப்பு விளக்கத்தை அவரிடம் அளித்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த பேச்சுவார்த்தைக்குப் பின்னர் சிஏஏ சட்டம் குறித்த தனது கருத்தை ரஜினி மாற்றிக் கொள்வாரா? அல்லது இஸ்லாமிய அமைப்பினர் தங்களது போராட்டத்தை நிறுத்திக் கொள்வார்களா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com