மூடப்பட்ட அறையில் கொரோனா வைரஸ் எவ்வளவு நேரம் உயிர்வாழும்??? புதிய ஆய்வால் ஏற்பட்ட அதிர்ச்சி!!!
Send us your feedback to audioarticles@vaarta.com
கடந்த 11 மாதங்களாக கொரோனா வைரஸ் பாதிப்வை தொடர்ந்து கட்டுப்படுத்த முடியாத நிலையில் உலக நாடுகள் தவித்து வருகின்றன. இந்நிலையில் கொரோனா வைரஸின் தாக்கத்தை எந்தெந்த வழிகளில் கட்டுப்படுத்தலாம் என்பது போன்ற ஆய்வுகளை விஞ்ஞானிகள் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். அப்படி செய்யப்பட்ட ஒரு ஆய்வில் கொரோனா வைரஸ் மூடப்பட்ட அறைக்குள் கிட்டத்தட்ட 30 நிமிடங்கள் வரை காற்றிலேயே சுற்றிக் கொண்டு இருக்கும் என்பது கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்த முகக்கவசம், பிபிஇ உடைகள், கையுறை, கிருமிநாசினி போன்ற பொருட்களைப் பயன்படுத்துமாறு தொடர்ந்து மருத்துவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். ஆனாலும் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிரிகத்து கொண்டே வருகிறது. இந்நிலையில் வைரஸால் பாதிக்கப்பட்ட ஒரு நபர் தும்மும்போதும், இருமும்போதும் வெளியாகும் நீர் திரவம் 6 அடி வரை தள்ளி நிற்கும் ஒருவரைத் தாக்கும் என்பது ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.
மேலும் இந்த வைரஸ் மூடப்பட்ட அறைக்குள் கிட்டத்தட்ட 30 நிமிடங்கள் வரை காற்றில் சுற்றித் திரிந்து உயிர்வாழும் தன்மைக் கொண்டது என்பதும் கண்டறியப் பட்டுள்ளது. இதனால் கூட்டமான இடங்களுக்கு செல்லும்போது மேலும் அதிக பாதுகாப்புடன் இருந்து கொள்ளமாறு அபுதாபி அரசு வெளியிட்டு உள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்து இருக்கிறது. கலீபா பல்கலைக் கழகம் மற்றும் கிளிவெலாண் மருந்து நிறுவனம் இரண்டும் இணைந்து மேற்கொண்ட இந்த ஆய்வில் மூடப்பட்ட இருட்டு அறைக்குள் புறாஊதா கதிர்களின் ஒளியை வைத்து இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.
Researchers at @KhalifaUni & @CCAD are developing a model to understand how the COVID-19 virus travels through the air & how long it can stay airborne, in order to ensure safer hospital environment & lower transmission rates, while assessing the effectiveness of masks & other PPE pic.twitter.com/ezZ0afnHFW
— مكتب أبوظبي الإعلامي (@admediaoffice) December 10, 2020
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments