டைவர்ஸ் பதிவுக்கு லைக் போட்ட அபிஷேக் பச்சன்.. ஐஸ்வர்யா ராயுடன் பிரிவு உண்மையா?
Send us your feedback to audioarticles@vaarta.com
கடந்த சில மாதங்களாக அபிஷேக் பச்சன் மற்றும் ஐஸ்வர்யா ராய் தம்பதிகள் பிரிய போவதாகவும் விரைவில் விவாகரத்துக்கு பெற போவதாகவும் வதந்திகள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் டைவர்ஸ் பதிவு ஒன்றுக்கு அபிஷேக் பச்சன் லைக் செய்துள்ளது பரபரப்பாக பார்க்கப்படுகிறது.
முன்னாள் உலக அழகி ஐஸ்வர்யா ராய் கடந்த 2007 ஆம் ஆண்டு நடிகர் அபிஷேக் பச்சனை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் இந்த தம்பதிக்கு ஒரு மகள் இருக்கிறார். இந்த நிலையில் தற்போது ஐஸ்வர்யா ராய் 50 வயதை தொட்டுள்ள நிலையில் அவர் அபிஷேக் பச்சனை விவாகரத்து செய்யப் போவதாகவும் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருப்பதாகவும் ஆனால் அதே நேரத்தில் தனது மகளுக்காக இருவரும் சகித்துக் கொண்டு வாழ்ந்து கொண்டிருப்பதாகவும் வதந்திகள் பரவி வருகின்றன.
சமீபத்தில் நடந்த ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட் திருமணத்திற்கு கூட அபிஷேக் பச்சன் மற்றும் ஐஸ்வர்யா ராய் தனித்தனியாக வந்தனர் என்றும் கூறப்பட்டது. இந்த நிலையில் சமூக வலைதளத்தில் கிரே டைவர்ஸ் குறித்த பதிவுக்கு அபிஷேக் பச்சன் லைக் செய்துள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
குழந்தைகள் வளர்ந்து பெரியவர்கள் ஆன பின்னர் 50 வயதை கடந்த தம்பதியினர் விவாகரத்து பெறுவதற்கு கிரே டைவர்ஸ் என்று கூறப்படுகிறது. உலகம் முழுவதும் தற்போது இது அதிகரித்து வரும் நிலையில் குழந்தைகளுக்காக சகித்துக் கொண்டு வாழும் தம்பதிகள் ஒரு கட்டத்தில் விவாகரத்து செய்துவிட்டு வேறு வேறு துணைகளை தேடி கொள்வதற்கு பெயர்தான் கிரே டைவர்ஸ் என்று கூறப்படுகிறது.
இப்படியான ஒரு கிரே டைவர்ஸ் இன்ஸ்டாகிராம் பதிவுக்கு அபிஷேக் பச்சன் லைக் செய்து உள்ளதால் ஒருவேளை ஐஸ்வர்யா ராயை அவர் பிரிய போவது உண்மைதானா என்றும் கமெண்ட்ஸ் பதிவாகி வருகின்றன.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com