'ஆர்.ஆர்.ஆர்.' பாடலுக்கு வேற லெவலில் டான்ஸ் ஆடிய தமிழ் பிக்பாஸ் பிரபலம்!

சமீபத்தில் வெளியான ’ஆர்.ஆர்.ஆர்.’ என்ற திரைப்படத்தின் பாடலுக்கு தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரபலம் ஒருவர் செம டான்ஸ் ஆடிய வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.

பிரமாண்ட இயக்குநர் எஸ்எஸ் ராஜமவுலி இயக்கத்தில் ராம்சரண் தேஜா மற்றும் ஜூனியர் என்டிஆர் நடித்த ’ஆர்.ஆர்.ஆர்.’ திரைப்படம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் வெளியாக உள்ளது. இந்த படத்தின் புரமோஷன் பணிகள் சமீபத்தில் தொடங்கிய நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் இந்த படத்தில் இடம்பெற்ற பாடல் ஒன்று வெளியானது.

ராம்சரண் தேஜா மற்றும் ஜூனியர் என்டிஆர் செம டான்ஸ் ஆடிய இந்த பாடல் உலகம் முழுவதும் வைரலானது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அபிராமி வெங்கடாச்சலம் தனது நண்பருடன் இந்த பாடலுக்கு செம ஆட்டம் போட்ட வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது மிகப்பெரிய அளவில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வீடியோவுக்கு வாழ்த்து தெரிவித்து ஏராளமான கமெண்ட்ஸ் பதிவாகி வருகிறது.