புழல் சிறையில் தற்கொலைக்கு முயன்ற அபிராமி: காரணம் என்ன?

  • IndiaGlitz, [Monday,October 08 2018]

கள்ளக்காதலால் பெற்ற குழந்தைகளை கொலை செய்த குன்றத்தூரை சேர்ந்த அபிராபி புழல் சிறையில் தற்கொலைக்கு முயன்றதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

குன்றத்தூரை சேர்ந்த அபிராமி என்ற பெண், அதே பகுதியை சேர்ந்த சுந்தரம் என்பவருடன் கள்ளக்காதலில் ஈடுபட்டிருந்தார். தங்களது கள்ளக்காதலுக்கு குழந்தைகள் இடைஞ்சலாக இருந்ததாக கருதிய அபிராமி, இரண்டு குழந்தைகளையும் ஈவு இரக்கமின்றி கழுத்தை நெறித்து கொலை செய்தார்.

பின்னர் கள்ளக்காதலனுடன் தப்பிக்க முயற்சி செய்த அபிராமியை போலீசார் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். அவரை ஜாமீனில் எடுக்க அவரது பெற்றோர்கள் கூட முன்வராததால் மனவிரக்தியுடன் அவர் சிறையில் இருந்ததாக கூறப்பட்டது.

இந்த நிலையில் சிறையில் துப்பட்டா மூலம் அபிராமி தற்கொலைக்கு முயன்றதாகவும், கடைசி நேரத்தில் பணியில் இருந்த சிறை அதிகாரிகள் அபிராமியை காப்பாற்றியதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது. குழந்தைகளை கொன்ற குற்ற உணர்வு மற்றும் குடும்பத்தினர் ஒதுக்கியதால் ஏற்பட்ட மனவிரக்தி ஆகியவற்றால் அபிராமி தற்கொலை முயற்சி செய்ததாக கூறப்படுகிறது.