எங்களுக்கு கட்டளையிட விஷால் யார்? அபிராமி ராமநாதன்
Send us your feedback to audioarticles@vaarta.com
தியேட்டர்களில் படம் பார்க்க வரும் ரசிகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், படம் பார்க்க வருபவர்களின் செலவுகளை குறைக்கவும் நேற்று தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால் சில கருத்துக்களை தெரிவித்தார்.
திரையரங்குகளில் அரசு நிர்ணயித்த கட்டணத்தை மட்டுமே வசூல் செய்ய வேண்டும், திரையரங்க கேண்டீன்களில் எம்.ஆர்.பி விலையில் மட்டுமே பொருட்களை விற்பனை செய்ய வேண்டும், கேண்டீனில் அம்மா குடிநீர் விற்பனை செய்ய வேண்டும், ரசிகர்கள் தண்ணீர் பாட்டில் மற்றும் தின்பண்டங்கள் கொண்டு வர அனுமதிக்க வேண்டும் என்பது உள்பட சில கருத்துக்களை விஷால் தெரிவித்திருந்தார். இதனை மீறும் திரையரங்குகள் மீது அரசிடம் புகார் கொடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்திருந்தார்
இதுகுறித்து ஆலோசிக்க இன்று மாலை திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தின் கூட்டம் நடைபெறவுள்ளது. இந்த நிலையில் சற்றுமுன்னர் திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தலைவர் அபிராமி ராமநாதன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
இங்கு யாருக்கும், யாரும் முதலாளி கிடையாது, தியேட்டர் உரிமையாளர்களுக்கு கட்டளையிடுவதை போல விஷால் பேசுகிறார். திரையரங்க விதிகளை விஷால் முடிவு செய்யக்கூடாது. உணவுப் பொருள் விலை பற்றி எங்களிடம் விஷால் ஆலோசிக்காதது சரியல்ல.
எங்களுக்கு கட்டளையிட விஷாலுக்கு என்ன அதிகாரம் இருக்கின்றது.. பெரிய படங்களுக்கு அதிக விலையில் டிக்கெட் விற்கப்படும். அதே நேரத்தில் சிறிய பட்ஜட் படங்களுக்கு திரையரங்குகளில் டிக்கெட் விலை குறைக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் அம்மா குடிநீர் பாட்டிலை அரசு வழங்கினால் தியேட்டர்களில் விற்பனை செய்ய தயார்' என்று கூறினார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com