எங்களுக்கு கட்டளையிட விஷால் யார்? அபிராமி ராமநாதன்

  • IndiaGlitz, [Saturday,October 14 2017]

தியேட்டர்களில் படம் பார்க்க வரும் ரசிகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், படம் பார்க்க வருபவர்களின் செலவுகளை குறைக்கவும் நேற்று தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால் சில கருத்துக்களை தெரிவித்தார். 

திரையரங்குகளில் அரசு நிர்ணயித்த கட்டணத்தை மட்டுமே வசூல் செய்ய வேண்டும், திரையரங்க கேண்டீன்களில் எம்.ஆர்.பி விலையில் மட்டுமே பொருட்களை விற்பனை செய்ய  வேண்டும், கேண்டீனில் அம்மா குடிநீர் விற்பனை செய்ய வேண்டும், ரசிகர்கள் தண்ணீர் பாட்டில் மற்றும் தின்பண்டங்கள் கொண்டு வர அனுமதிக்க வேண்டும் என்பது உள்பட சில கருத்துக்களை விஷால் தெரிவித்திருந்தார். இதனை மீறும் திரையரங்குகள் மீது அரசிடம் புகார் கொடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்திருந்தார்

இதுகுறித்து ஆலோசிக்க இன்று மாலை திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தின் கூட்டம் நடைபெறவுள்ளது. இந்த நிலையில் சற்றுமுன்னர் திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தலைவர் அபிராமி ராமநாதன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

இங்கு யாருக்கும், யாரும் முதலாளி கிடையாது, தியேட்டர் உரிமையாளர்களுக்கு கட்டளையிடுவதை போல விஷால் பேசுகிறார். திரையரங்க விதிகளை விஷால் முடிவு செய்யக்கூடாது. உணவுப் பொருள் விலை பற்றி எங்களிடம் விஷால் ஆலோசிக்காதது சரியல்ல. 

எங்களுக்கு கட்டளையிட விஷாலுக்கு என்ன அதிகாரம் இருக்கின்றது.. பெரிய படங்களுக்கு அதிக விலையில் டிக்கெட் விற்கப்படும். அதே நேரத்தில் சிறிய பட்ஜட் படங்களுக்கு திரையரங்குகளில் டிக்கெட் விலை குறைக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.  மேலும் அம்மா குடிநீர் பாட்டிலை அரசு  வழங்கினால் தியேட்டர்களில் விற்பனை செய்ய தயார்' என்று கூறினார்.
 

More News

உதயநிதியின் அடுத்த படத்தில் விஜய் தயாரிப்பாளர், விஷால் இயக்குனர்

கோலிவுட் திரையுலகின் இளையதலைமுறை நடிகர்களில் ஒருவர் உதயநிதி ஸ்டாலின். இவர் நடித்து முடித்துள்ள 'இப்படை வெல்லும்' திரைப்படம் வெகுவிரைவில் திரைக்கு வரவுள்ளது.

நயன்தாராவின் 'அறம்' ரிலீஸ் தேதி அறிவிப்பு

நயன்தாரா நடித்த 'அறம்' திரைப்படம் கடந்த சில நாட்களுக்கு முன்னரே ரிலீசுக்கு தயார் நிலையில் இருந்தாலும் புதிய படங்கள் வெளியீடு இல்லை என்ற கட்டுப்பாடு காரணமாக ரிலீஸ் தேதி அறிவிக்கப்படாமல் இருந்தது.

காயத்ரி என்னை குழந்தை மாதிரி பார்த்து கொண்டார்: ஓவியா

பிக்பாஸ் நிகழ்ச்சியில் மக்களின் வெற்றியாளரான ஓவியாவுக்கு ரசிகர்கள் நாளுக்கு நாள் குவிந்து கொண்டே இருப்பதில் எந்தவித ஆச்சரியமும் இல்லை. ஓவியாவின் கேரக்டர் கோடியில் ஒருவருக்கே இருக்கும் என்பதை

நவம்பர் 3-ல் ரிலீஸ் ஆகும் படங்கள் குறித்து தயாரிப்பாளர் சங்கம் அறிவிப்பு

தமிழக அரசின் கேளிக்கை வரி 10 சதவிகிதத்திற்கு  எதிர்ப்பு தெரிவித்து சமீபத்தில் புதிய படங்கள் ரிலீஸ் இல்லை என்ற முடிவை தயாரிப்பாளர் சங்கம் எடுத்தது.

மெர்சல் சென்சார் சான்றிதழில் திடீர் சிக்கலா?

தளபதி விஜய் நடித்த 'மெர்சல்' திரைப்படம் கடந்த சில நாட்களுக்கு முன்னர் சென்சாருக்கு சென்று 'யூ/ஏ சான்றிதழ் பெற்றது என்பது அனைவரும் அறிந்ததே