நிரூப்புக்கு அபிராமி கொடுத்த அழுத்தமான முத்தம்: மீண்டும் மலர்கிறதா காதல்?
Send us your feedback to audioarticles@vaarta.com
பிக்பாஸ் போட்டியாளர்களான நிரூப் மற்றும் அபிராமி ஆகிய இருவரும் முன்னாள் காதலர்கள் என்ற நிலையில் தற்போது நிரூப்புக்கு அபிராமி அழுத்தமான முத்தம் கொடுத்து உள்ளதால் மீண்டும் காதல் மலர்கிறதா? என்ற கேள்வியை ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர்.
தற்போது ஹாட்ஸ்டார் ஓடிடியில் 24 மணி நேரமும் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் இந்த வாரம் தேவதைகள் மற்றும் அரக்கர்கள் டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் இரண்டு அணிகளாகப் பிரிந்து போட்டியாளர்கள் விளையாடி வருகின்றனர்.
இந்த நிலையில் இந்த டாஸ்க்கின்போது தாமரையிடம் நிரூப் மற்றும் அபிராமி சிக்கிக்கொள்ள அவர்கள் இருவருக்கும் தாமரை ஒரு டாஸ்க் கொடுக்கிறார். நிரூப்பிற்கு அபிராமி முத்தம் கொடுக்க வேண்டும் என்று தாமரை கூற அதற்கு முதலில் இருவரும் மறுத்தாலும் பின்னர் தாமரை அவர்களை சமாதானப்படுத்தி முத்தம் கொடுத்து வைக்கிறார். இதனை அடுத்து அழுத்தமான முத்தத்தை நிரூப்புக்கு அபிராமி கொடுக்கிறார். இதுகுறித்த வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது .
முன்னாள் காதலர்கள் என்றாலும் காதல் பிரிவு என்று எடுத்த முடிவில் உறுதியாக நிரூப் மற்றும் அபிராமி இருந்து வரும் நிலையில் இந்த முத்தம் காரணமாக மீண்டும் காதல் மலருமா? என்ற கேள்வியை ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர்.
Well done ??????
— ???????????? ?????????? (@BitterTruth2322) February 24, 2022
Whattta creativity task #Thamarai #BBUltimate #BBUltimateTamil #Niroop #Abhirami pic.twitter.com/T6xHteAWoy
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com