ராணுவ வீரர் அபிநந்தன் கேரக்டரில் தமிழ் நடிகர்.. 5 மொழிகளில் வெளியானது வெப் தொடர்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
இந்திய ராணுவ வீரர் அபிநந்தன் என்பவரை பாகிஸ்தான் ராணுவம் சிறை பிடித்த நிலையில் அதன் பின்னர் அவரை விடுவிக்க மத்திய அரசு எடுத்த அதிரடி நடவடிக்கைகள் குறித்த தொடரில் அபிநந்தன் கேரக்டரில் பிரபல தமிழ் நடிகர் நடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 2019 ஆம் ஆண்டு பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 44 இந்திய ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதற்கு பதிலடியாக இந்திய விமானப்படை விமானங்கள் பாகிஸ்தானுக்குள் நுழைந்து அதிரடியாக தீவிரவாதிகள் முகாம்களை தாக்கியது.
இந்த தாக்குதலில் இந்தியாவின் விமானப்படை விமானம் பாகிஸ்தான் பகுதியில் உள்ள கிராமத்தில் விழுந்த நிலையில் அதில் இருந்த போர் விமானி அபிநந்தனை பாகிஸ்தான் ராணுவம் சிறை பிடித்தது
இந்த தாக்குதல் சம்பவத்தை மையமாக வைத்து 'ரண்ணீதி: பாலகோட் அண்ட் பியாண்ட்’ (Ranneeti: Balakot & Beyond) என்ற வெப் தொடர் உருவாகியுள்ள நிலையில் இந்த வெப் தொடரில் அபிநந்தன் கேரக்டரில் தமிழ் நடிகர் பிரசன்னா நடித்துள்ளார்.
இதில் நடித்தது குறித்து அவர் கூறிய போது ’அபிநந்தன் கேரக்டரில் நடித்ததை நான் பெருமையாக கருதுகிறேன், இந்த சம்பவம் குறித்து வெளியான தகவலை விட கூடுதல் தகவல்கள் இந்த வெப் தொடரில் இடம் பெற்றுள்ளது. குறிப்பாக பாகிஸ்தான் எல்லையில் விழுந்த அபிநந்தன் ராணுவ ரகசியங்களை வாயில் போட்டு விழுங்கி மறைத்தார், மைனஸ் 4 டிகிரி குளிரில் அந்த காட்சி படமாக்கப்பட்டது, அந்த காட்சியில் நடித்தபோது நடுங்கி விட்டதாக தெரிவித்தார்
மேலும் இந்த தாக்குதல் சம்பவத்தில் தொடர்புடைய சிலரை நேரில் சந்தித்ததாகவும் அப்போது அவர்கள் சொன்னதை கேட்டு தனது உடல் சிலிர்த்ததாகவும், இந்த வெப் தொடர் கண்டிப்பாக அனைவருக்கும் புது அனுபவத்தை கொடுக்கும் என்றும் பிரசன்னா கூறியுள்ளார். இந்த வெப் தொடர் தமிழ் உள்பட 5 மொழிகளில் ஜியோ சினிமாவில் வெளியாகியுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments