வாகா வந்தடைந்தார் அபிநந்தன்: உற்சாகமான வரவேற்பு
- IndiaGlitz, [Friday,March 01 2019]
கடந்த இரண்டு நாட்களுக்கு முன் பாகிஸ்தானில் சிக்கிய தமிழகத்தை சேர்ந்த இந்திய ராணுவ வீரர் அபிநந்தனை பாகிஸ்தான் ராணுவம் கைது செய்தது. அபிநந்தனை விடுவிக்க இந்தியா ராஜதந்திரத்துடன் உலக நாடுகளிடம் பாகிஸ்தானுக்கு அழுத்தம் கொடுக்கும்படி கேட்டுக்கொண்டது. இதன்படி அமெரிக்கா, பிரிட்டன், அரபு நாடுகள் உள்பட சுமார் 20 நாட்டு தலைவர்கள் கொடுத்த அழுத்தம் காரணமாக அபிநந்தனை விடுவிக்க பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் ஒப்புக்கொண்டார்.
இதனையடுத்து இன்று காலை பாகிஸ்தானில் அபிநந்தனுக்கு மருத்துவ சோதனை செய்யப்பட்டு லாகூரில் உள்ள இந்திய தூதரிடம் ஒப்படைக்கப்பட்டார். இந்த நிலையில் இந்திய பாகிஸ்தான் எல்லையான வாகாவுக்கு அபிநந்தன் சற்றுமுன் வந்தடைந்தார் விமான படை வீரர் அபிநந்தனனுக்கு வாகா எல்லையில் பொதுமக்கள் ஆரவார வரவேற்பு அளித்தனர்.
இந்த நிலையில் அபிநந்தனை வரவேற்க பஞ்சாப் முதல்வர் விரும்புவதாக தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்திருந்தார். ஆனால் அரசியல்வாதிகள் யாருக்கும் அனுமதி இல்லை என்பதால் அபிந்தனை வரவேற்க பஞ்சாப் முதல்வருக்கு அனுமதி அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது