பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் வைல்ட்கார்ட் போட்டியாளரா அபிஷேக்? அவரே அளித்த தகவல்!
Send us your feedback to audioarticles@vaarta.com
பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி ஒரு வாரம் முடிவடைந்த நிலையில் முதல் வாரம் சுரேஷ் சக்கரவர்த்தி எலிமினேட் செய்யப்பட்டார் என்பதும் அவர் வெளியேறியது பிக்பாஸ் அல்டிமேட் ரசிகர்களுக்கு பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்த வாரம் ஜூலி எலிமினேஷன் ஆவதற்கு டார்கெட் செய்யப்பட்டிருக்கும் நிலையில் அவர் வெளியேற்றப்படுவாரா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
இந்த நிலையில் பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் 16 போட்டியாளர்கள் கலந்து கொள்வார்கள் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது 14 போட்டியாளர்கள் மட்டுமே கலந்து கொண்டு இருப்பதால் மீதமுள்ள இரண்டு போட்டியாளர்கள் வைல்ட்கார்ட் போட்டியாளராக அனுப்பப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் சமூக வலைத்தளத்தில் ரசிகர் ஒருவர் ’பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் வைல்ட்கார்ட் போட்டியாளராக செல்லப் போகிறீர்களா? என்ற கேள்விக்கு பதிலளித்த அபிஷேக், ‘ஆமாம் இந்த முறை என்னை சாக்குமூட்டையில் கட்டி அனுப்ப போறாங்க, வனிதா அக்கா உருட்டு கட்டையுடன் என்னை வரவேற்க தயாராக இருக்கிறார்’ என்று கிண்டலாக கூறியுள்ளார். இருப்பினும் நிகழ்ச்சியின் பரபரப்பை அதிகரிக்க அபிஷேக் வைல்ட் கார்ட் என்ட்ரி ஆக அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com