ஆனந்த அம்பானி திருமணத்திற்கு தனித்தனியாக வந்தார்களா அபிஷேக் - ஐஸ்வர்யா ராய்? தீயாய் பரவும் வதந்தி..!
Send us your feedback to audioarticles@vaarta.com
பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானியின் திருமணம் மும்பையில் ஆடம்பரமாக நடைபெற்று வரும் நிலையில் இந்த திருமணத்தில் திரையுலக பிரபலங்கள் பலர் கலந்து கொண்டு வருகின்றனர் என்பதும் ரஜினிகாந்த் உட்பட பல பிரபலங்கள் கலந்து கொண்ட புகைப்படம் வீடியோக்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது என்பதையும் பார்த்து வருகிறோம்.
இந்த நிலையில் இந்த திருமணத்திற்கு நடிகர் அபிஷேக் பச்சன் தனது தந்தை அமிதாப்பச்சன் உடன் வந்ததாகவும் நடிகை ஐஸ்வர்யா ராய் தனது மகளுடன் வந்ததாகவும் இருவரும் தனித்தனியே வந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வரும் நிலையில் பல வதந்திகள் பரவி வருவதாகவும் கூறப்படுகிறது.
ஏற்கனவே அபிஷேக் பச்சன் மற்றும் ஐஸ்வர்யா ராய் ஆகிய இருவரும் கருத்து வேறுபாடுடன் இருப்பதாகவும் விரைவில் இவர்கள் பிரிய வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்பட்ட நிலையில் இந்த புகைப்படங்கள் அதனை உறுதி செய்வது போல் இருந்தன.
ஆனால் அதே நேரத்தில் இருவரும் தனித்தனியாக திருமணத்திற்கு வந்தாலும் ஒன்றாக அருகருகே தான் உட்கார்ந்து இருந்தார்கள் என்றும், இணையத்தில் பரவி வரும் செய்திகள் அனைத்தும் வதந்திகள் என்றும், இருவரும் பிரியவில்லை என்றும் இன்னொரு தரப்பினர் கூறி வருகின்றனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com