நான் வேறொருவரை திருமணம் செய்ய ஆசைப்பட்டேன்: அபிஷேக் புது மனைவி அதிர்ச்சி பேட்டி..!
- IndiaGlitz, [Sunday,June 16 2024]
பிரபல யூடியூபர் மற்றும் பிக்பாஸ் போட்டியாளர் அபிஷேக் சமீபத்தில் சுவாதி என்பவரை திருமணம் செய்த நிலையில் அவருடைய புது மனைவி ’நான் வேறொருவரை திருமணம் செய்ய ஆசைப்பட்டேன்’ என்று பேட்டி ஒன்றில் தெரிவித்து இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பிக் பாஸ் சீசன் 5 போட்டியாளர் அபிஷேக் கடந்த 2017 ஆம் ஆண்டு தீபா நடராஜன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் ஒரு சில வருடங்களில் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று பிரிந்து விட்டனர்.
அதன் பிறகு சில ஆண்டுகளாக சுவாதி நாகராஜன் என்பவரை காதலித்த அபிஷேக் ராஜா சமீபத்தில் அவரை திருமணம் செய்து கொண்டார் என்பதும் திருமணம் குறித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது என்பது தெரிந்தது.
இந்த நிலையில் திருமணத்திற்கு பின் இருவரும் ஜோடியாக சில ஊடகங்களுக்கு பேட்டி அளித்து வரும் நிலையில் அவ்வாறு அளித்த ஒரு பேட்டியில் சுவாதி நாகராஜன் கூறிய போது ’சிறு வயதிலிருந்து நான் சிவபெருமான் கதைகளை கேட்டு வளர்ந்தேன், என் பாட்டி எனக்கு சொன்ன சிவன் கதை எல்லாம் கவர்ந்ததை அடுத்து நான் சிவனைத் தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று ஆசைப்பட்டேன்’ என்று தெரிவித்தார்.
அப்போதுதான் அபிஷேக் என்னை சந்தித்தார், நான் தான் சிவன், என்னுடைய பெயர் சிவராமகிருஷ்ணன் சுப்பிரமணி என்று சொன்னதை அடுத்து அவரை காதலிக்க தொடங்கினேன், அதன் பிறகு அவரையே திருமணம் செய்து கொண்டேன் என்றும் தெரிவித்துள்ளார்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் அபிஷேக் பேசியதுதான் பார்வையாளர்களை கடுப்பாக்கியது என்று நினைத்தால் அவருடைய புது மனைவி சுவாதி பேசுவது அதைவிட கிரிஞ்சாக இருக்கிறது என்று நெட்டிசன்கள் இந்த பேட்டிக்கு கமெண்ட் பதிவு செய்து வருகின்றனர்.