அபிராமி கணவருக்கு ஆறுதல் கூறிய ரஜினிகாந்த்

  • IndiaGlitz, [Wednesday,September 05 2018]

கடந்த சில நாட்களாக சென்னையை உலுக்கிய சம்பவங்களில் ஒன்று சென்னை குன்றத்தூர் பகுதியை சேர்ந்த அபிராமி என்ற பெண் தனது கள்ளக்காதலனுடன் ஓடிப்போக இரண்டு குழந்தைகளை கொன்ற கொடூரம். தற்போது அபிராமி போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

ஆனால் அபிராமியின் கணவர் விஜய்யால் இன்னும் இந்த அதிர்ச்சியை ஜிரணிக்க முடியவில்லை. தனது இரண்டு குழந்தைகள் மீதும் மனைவியின் மீதும் அளவுகடந்த பாசம் வைத்திருந்த விஜய், தற்போது அனாதை போல் தனிமையில் வாடுகிறார்.

இந்த நிலையில் விஜய், சூப்பர் ஸ்டார் ரஜினியின் தீவிர ரசிகர் என்ற தகவல் ஊடகங்களில் வெளியானது. இதனையறிந்த ரஜினிகாந்த் இன்று விஜய்யை நேரில் சந்தித்து அவருக்கு ஆறுதல் கூறினார். விஜய்யின் இரண்டு குழந்தைகளும் ரஜினியின் தீவிர ரசிகர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.