'வேட்டையன்' படத்தில் அபிராமி கேரக்டர்.. சூப்பர் வீடியோ வெளியிட்ட லைகா..!
Send us your feedback to audioarticles@vaarta.com
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’வேட்டையன்’ திரைப்படம் அக்டோபர் 10ஆம் தேதி உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இந்நிலையில், இப்படத்தின் ப்ரோமோஷன் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
சமீபத்தில் சென்னையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. மேலும் ரஜினிகாந்த், ரித்திகா சிங், அமிதாப் பச்சன், பகத் பாசில் உள்ளிட்ட நட்சத்திரங்களின் கேரக்டர்கள் குறித்த வீடியோக்கள் அவ்வப்போது வெளியாகி வருகின்றன.
அந்த வகையில், தற்போது நடிகை அபிராமி, "ஸ்வேதா" என்ற கேரக்டரில் ’வேட்டையன்’ படத்தில் நடித்திருப்பதாக அறிவிக்கப்பட்டு, லைகா நிறுவனம் வெளியிட்ட சூப்பர் வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
நடிகை அபிராமி 2001ஆம் ஆண்டு ’வானவில்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். அதன்பின்னர், கமல்ஹாசனுடன் ’விருமாண்டி’ , உள்பட மற்றும் பல படங்களில் நடித்தார். ’விருமாண்டி’ படத்தின் பின்னர், 10 ஆண்டுகள் திரையுலகில் இருந்து விலகி இருந்த அபிராமி, ஜோதிகாவின் ’36 வயதினிலே’ திரைப்படத்தின் மூலம் ரீஎன்ட்ரி செய்தார்.
தற்போது, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழி படங்களில் நடித்து வருகிறார். குறிப்பாக ரஜினிகாந்த்துடன் ’வேட்டையன்’ கமல்ஹாசனுடன் ’தக்லைஃப்’ ஆகிய திரைப்படங்களில் ஒரே நேரத்தில் இரண்டு பிரபலங்களுடன் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Introducing @abhiramiact as SWETHA 🤩 in VETTAIYAN 🕶️ Witness her powerful performance on the screen. 🔥#Vettaiyan 🕶️ Releasing on 10th October in Tamil, Telugu, Hindi & Kannada!@rajinikanth @SrBachchan @tjgnan @anirudhofficial @LycaProductions #Subaskaran @gkmtamilkumaran… pic.twitter.com/Eku9FUkKZ1
— Lyca Productions (@LycaProductions) September 26, 2024
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments