மதுமிதா வீடியோவுக்கு அபிராமியின் ஆத்திரமான பதில்!

பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்தது முதல், கூலாக ரசிகர்களுடன் செல்பி எடுத்து ஜாலியாக காட்சியளிக்கும் அபிராமி, மதுமிதா குறித்து ஆத்திரமாக அளித்த பேட்டி ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோ குறித்து அபிராமி தனது விளக்கத்தை அளித்துள்ளார்.

பிக்பாஸ் பெயரில் நான் மதுமிதா குறித்து ஆத்திரமாக பேசியதாக ஒரு பேட்டி இணையத்தில் உள்ளது. இது நான் கொடுத்த பேட்டியே இல்லை. இந்த வேலையை யார் செய்தது என்று தெரியவில்லை. நான் கொடுக்காத பேட்டியை எனது குரலில் பதிவு செய்துள்ளார்கள். இது மிகவும் இழிவான ஒரு செயல். நான் பேட்டி அளிக்க வேண்டும் என்றால் நேராக என் குரலிலேயே பேட்டி கொடுப்பேன். எவனோ எனது குரலில் பேசி பேட்டி கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை

பிக்பாஸ் குறித்து நான் எதுவும் பேசவில்லை என்பதால் என்ன வேண்டுமானாலும் இஷ்டத்திற்கு செய்யலாம் என்று யாரோ செய்து கொண்டிருக்கின்றார்கள். இந்த விளக்கத்தை ரசிகர்கள் புரிந்து கொள்வார்கள் என்று நம்புகிறேன்' என்று விளக்கம் அளித்துள்ளார்.