கொரோனா மூன்றாவது அலை, எப்படி இருக்கும்...!ஜோதிடர் அபிக்யா கூறுவது என்ன..?

  • IndiaGlitz, [Thursday,June 17 2021]

கொரோனா குறித்து சென்ற 2019-லே சரியாக கணித்து கூறியவர் தான் ஜோதிடர் அபிக்யா ஆனந்த் . கர்நாடகாவைச் சார்ந்த இந்த குட்டி ஜோதிடர் 2006-ஆம் ஆண்டு பிறந்தவர். இவரது பெற்றோர்கள் ஆனந்த் ராமசுப்ரமணியன், அனு ஆனந்த் மற்றும் அபிக்தியா என்ற சகோதரி உள்ளார்.

சிறுவயது முதலே ஆன்மிகத்தில் ஆர்வமுள்ள அபிக்யா, இதிகாசங்களையும், வேதங்களையும் நன்கு கற்று வந்தார். இதையடுத்து கடந்த 2015-ஆன் ஆண்டு கான்சைன்ஸ்’ என்ற யுடியூப் சேனலை துவங்கி, அதில் கிரகப்பெயர்ச்சி, ராசி பலன், ஜோதிட குறிப்புகள் பற்றி ஆதாரத்துடன் வெளியிடுவது தான் இவரின் தனித்தன்மையே. இதேபோல கடந்த ஆண்டும் கொரோனா தொற்று ஏற்படும், பொருளாதாரம் சரியும், 2020 மே-28-க்குள் கொரோனா கட்டுக்குள் வரும் என்பதை துல்லியமாக கணித்து கூறியிருந்தார். இதனால் பலரின் பாராட்டுகளும், விருதுகளும் இவருக்கு கிடைத்தது. கடந்த 2015-ம் ஆண்டில் பகவத் கீதா விருதும், 2016-ம் ஆண்டில் ஸ்லோகா பிரவீனா விருதும், ஸ்பந்தன்ஸ்ரீவிருதும் பெற்றுள்ளார். 1.05 மில்லியன் சப்ஸ்கிரைபர்ஸ் அபிக்யா யுடியூப் தளத்தை தற்போது பின்தொடர்ந்து வருகிறார்கள்.இவரின் கணிப்பிற்காக பல ரசிகர்களும் காத்திருக்கிறார்கள் என்று சொல்லலாம்.

இந்நிலையில் கொரோனாவின் மூன்றாம் அலை குறித்து அபிக்யா அண்மையில் கூறியிருப்பதாவது,

வரும் 2021 ஜூன் 20-க்கு பின் என்ன நடக்கும்..?

பூமிக்கு அருகில் செவ்வாய் கிரகம் இருப்பதால் இதன் தாக்கங்கள் உலக மக்களுக்கு அதிகமாக இருக்கும்.
வியாழன்(சுக்கிரன்) கிரகம் வரும் செப்டம்பர் 14,2021 அன்று மகரத்திற்குள் நுழைகிறது. நவம்பர் 21, 2021 இல் மீண்டும் மகரத்திலிருந்து வெளியேறுகிறது. இந்த கால கட்டம் மக்களுக்கு கடினமாகவே இருக்கும். உடல்நலம் மற்றும் பொருளாதார சூழல் பொதுமக்களுக்கு கஷ்டத்தையேதரும். பொருளாதாரம் மற்றும் பங்குச் சந்தைகளில் பெரும் மாற்றங்கள் நிகழும் என அபிக்யா கூறியுள்ளார்.

கொரோனா:

கோவிட்-19 தொற்றின் மூன்றாவது அலையின் தாக்கமானது ஜூன்- 20, 2021 முதல் நவம்பர் 21, 2021 வரை அதிகமாக இருக்கும். ஐரோப்பா, அமெரிக்கா, இந்தியா, UK உள்ளிட்ட பல உலக நாடுகளில், தடுப்பூசிகள் போடப்பட்டாலும் கொரோனா கட்டுக்குள் இருக்காது, தாக்கம் அதிகரித்துக்கொண்டேசெல்லும் . ஆனால் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கவேண்டும்.2021 ஆம் வருடத்தில், செப்டம்பர் முதல் நவம்பர் வரை, உலகத்திற்கான எதிர்மறையான(கெட்ட) காலம் எனவும் சொல்லலாம்.

2021, நவம்பர் 21-க்கு பின் என்ன மாற்றங்கள் நிகழும்..?

பொருளாதாரம் மற்றும் பங்குச்சந்தைகளில் நவம்பர்,21 -க்குப் பிறகு தான் நல்ல மாற்றங்கள் நிகழும்.
A)ஜூன் 20- நவம்பர் 21, 2021
B) ஏப்ரல் 2022
இந்த இரண்டு கால கட்டங்களிலும் பங்கு சந்தைகளின் நிலவரம் சற்று சரிவாகவே இருக்கும்.

ஏப்ரல் 2023-இல் கொரோனாவின் தாக்கம் குறைந்து விடும்.இந்த 2021 ஆம் ஆண்டு இக்கட்டான கால கட்டடத்தில் மக்கள் கடவுள் நம்பிக்கையுடனும், உடலில் நோய் எதிர்ப்பு மண்டலத்தை பாதுகாப்பாகவும், வைத்திருக்கவேண்டும் என்றும் அபிக்யா அறிவுறுத்தியுள்ளார் என்பது குறிப்பிப்பிடத்தக்கது.