ரஜினி-அப்துல்கலாம் உதவியாளர் திடீர் சந்திப்பு

  • IndiaGlitz, [Tuesday,September 06 2016]

முன்னாள் குடியரசு தலைவர் அப்துல்கலாம் அவர்களின் உதவியாளர் பொன்ராஜ் சமீபத்தில் புதிய அரசியல் கட்சி ஒன்றை ஆரம்பித்துள்ள நிலையில் பல அரசியல் தலைவர்களை அவர் சந்தித்து வருகிறார். இந்நிலையில் இன்று அவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களை சந்தித்துள்ளார்.
நதிநீர் இணைப்பில் மிகுந்த ஆர்வம் கொண்டவர் பொன்ராஜ். அதேபோல் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் நதிகளை இணைக்கும் திட்டத்திற்கு ஒரு கோடி ரூபாய் தருவதாக அறிவித்தவர் ரஜினி. இந்நிலையில் இருவரின் சந்திப்பு அரசியலில் பல ஊகங்களை எழுப்பியுள்ளது.
இந்த சந்திப்பின்போது ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவேண்டும் என்று பொன்ராஜ் விருப்பம் தெரிவித்ததாகவும், அதற்கு கடவுள் விருப்பம் அதுவாக இருந்தால் நிச்சயம் நடக்கும் என்று ரஜினி பதிலளித்ததாகவும் கூறப்படுகிறது.
1996 தேர்தலில் இருந்து ஒவ்வொரு தேர்தலிலும் தனது வாய்ஸை அளித்து வந்த ரஜினி கடந்த சில வருடங்களாக அரசியலில் இருந்து முற்றிலும் விலகியுள்ளார். இந்நிலையில் அவர் அரசியலில் குதிப்பாரா? என்பதை காலம்தான் பதில் சொல்ல வேண்டும்.

More News

ரம்யா படத்திற்கு ரஜினி பட வசனத்தின் டைட்டில்

ஏற்கனவே ரஜினியின் புகழ்பெற்ற வசனமான 'எனக்கு இன்னொரு பேர் இருக்கு' என்ற வசனத்தை டைட்டிலாக கொண்டு ஒரு திரைப்படம்...

நாக சைதன்யா-சமந்தா திருமணம் எப்போது? நாகார்ஜூனே தகவல்

பிரபல தெலுங்கு நடிகர் நாகார்ஜூனன் மகன் நாக சைதன்யாவுக்கும் நடிகை சமந்தாவுக்கு விரைவில் திருமணம் நடைபெறவுள்ளது என்ற தகவல் ஏற்கனவே உறுதியாகியுள்ள...

விஜய்-செல்வராகவன் திடீர் சந்திப்பு. அடுத்த படத்தை இயக்குவாரா?

இளைதளபதி விஜய் நடித்து வரும் 'பைரவா' படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே 70% முடிந்துவிட்ட நிலையில் இந்த படத்தின் மொத்த படப்பிடிப்பு...

அஜித்-விஜய்க்காக விட்டு கொடுத்த ராகவா லாரன்ஸ்

இளையதளபதி விஜய் நடித்து வரும் 60வது படத்தின் டைட்டில் 'பைரவா' என்பது நேற்று முன் தினம் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது...

நானும் ரஜினியும் கலியுக துரியோதனன்-கர்ணன். பிரபல நடிகர்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் நெருங்கிய நண்பரும், பிரபல தெலுங்கு நடிகருமான மோகன்பாபு சமீபத்தில் ரஜினியை சந்தித்து