அப்துல்கலாம் நெருங்கிய நண்பர் கொரோனாவால் பலி: அதிர்ச்சி தகவல்!

முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் அவர்களின் நெருங்கிய நண்பர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளதாக வெளிவந்துள்ள செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் அவர்களின் கல்லூரி கால நண்பர் போஜா கவுடர். இவர் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் என்பதும் அப்துல் கலாமின் நெருங்கிய நண்பர் என்பதும் குறிப்பிடத்தக்கது

கடந்த 2006ம் ஆண்டு அப்துல் கலாம் குடியரசு தலைவராக இருந்தபோது ஊட்டியில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போதுதான் தனது நண்பர் போஜா கவுடரை மேடைக்கு அழைத்து தனது கல்லூரி நினைவுகளை பகிர்ந்து கொண்டு அவருக்கு பொன்னாடை போர்த்தி கவுரவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் போஜா கவுடர் அவர்களுக்கு கடுமையான காய்ச்சல் ஏற்பட்டதை அடுத்து ஊட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கொரோனா பரிசோதனை செய்தபோது கொரோனா பாசிட்டிவ் என்பது உறுதியானதால் கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். இருப்பினும் சிகிச்சையின் பலனின்றி நேற்று மரணமடைந்தார். அப்துல் கலாமின் நெருங்கிய நண்பர் கொரோனாவுக்கு பலியாகி இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
 

More News

வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த ஐஸ்வர்யாராய், மருத்துவமனையில் அனுமதி!

பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன் மற்றும் அவரது மகன் அபிஷேக்பச்சன் ஆகிய இருவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில்

கொரோனா பாதிப்புக்கு பின் 'பிகில்' படத்தை ரீரிலீஸ் செய்யும் 4வது நாடு

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த நான்கு மாதங்களாக உலகம் முழுவதும் திரையரங்குகள் மூடப்பட்டுள்ளது என்பதும் ஓரளவு கொரோனா பாதிப்பு குறைந்த நாடுகளில் படிப்படியாக திரையரங்குகள் திறக்கப்பட்டு வருகிறது

தமிழகத்தில் இன்று அதிகபட்ச பலி எண்ணிக்கை: அதிர்ச்சி தகவல்

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வந்தபோதிலும் கடந்த மாதம் வரை பலி எண்ணிக்கை குறைவாகவே இருந்ததால்

மும்பையில் 4 வீடுகள் இருந்தும் பிச்சை எடுத்த முதிய பெண்: கொலை செய்த மருமகள்

மும்பையில் ஒரே ஒரு வீடு இருந்தாலே பணக்காரர் என்ற நிலையில் நான்கு வீடுகள் இருந்தும் பிச்சை எடுத்து வந்த முதிய பெண் ஒருவரை அவரது மருமகளே கழுத்தை நெரித்து கொலை செய்த சம்பவம்

HCL நிறுவனத்தின் தலைவராகும் இந்தியாவின் பணக்காரப் பெண்!!!

HCL நிறுவனத்தின் தற்போதைய தலைமை நிர்வாக அதிகாரியாக பொறுப்பு வகிக்கும் ஷிவ் நாடார் வருகிற 17 ஆம் தேதி தனது பதவியில் இருந்து விலகுவதாக அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.