திரைப்படமாகும் அப்துல் கலாம் வாழ்க்கை வரலாறு: இயக்குனர் யார் தெரியுமா?
Send us your feedback to audioarticles@vaarta.com
முன்னாள் ஜனாதிபதியும் விஞ்ஞானியுமான அப்துல் கலாம் வாழ்க்கை வரலாறு திரைப்படம் எடுக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2002ஆம் ஆண்டு முதல் 2007ஆம் ஆண்டுவரை இந்தியாவின் ஜனாதிபதியாக பதவி வகித்தவர் அப்துல் கலாம். மேலும் இவர் ஒரு விஞ்ஞானி என்பதும் இவரது தலைமையின் கீழ் இஸ்ரோ மிக சிறப்பாக செயல்பட்டது என்பது குறிப்பிடதக்கது.
ராமேஸ்வரத்தில் ஏழை குடும்பத்தில் பிறந்த அப்துல் கலாம் இந்தியாவின் மிக உயர்ந்த பதவியை பெற்றதற்கு அவரது கடுமையான உழைப்பே காரணம் என்பதும், அவருடைய கொள்கைகள், பேச்சுகள், வழிகாட்டிகள் இன்றும் இளைஞர்கள் மற்றும் குழந்தைகளுக்கு ஊக்கமளிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
பாரத ரத்னா விருது உட்பட பல விருதுகளை பெற்ற அப்துல் கலாமின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாக உள்ளதாகவும் ’விஞ்ஞானியன்’ என்று பெயரிடப்பட்ட இந்த படத்தை பிரபல மலையாள இயக்குநர் ஸ்ரீகுமார் இயக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும் அப்துல் கலாம் கேரக்டரில் நடிக்கவிருப்பது யார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout