கண்ணீர் தழும்ப அப்துல் ஹமீது வெளியிட்ட வீடியோ..! என்ன ஆச்சு?
Send us your feedback to audioarticles@vaarta.com
பிரபல இலங்கை வானொலி தொகுப்பாளர் அப்துல் ஹமீது நேற்று திடீரென காலமானதாக வதந்தி பரவிய நிலையில் அவரது தரப்பில் அப்துல் ஹமீது உயிரோடு இருப்பதாகவும் வதந்தியை நம்ப வேண்டாம் என்றும் விளக்கம் அளிக்கப்பட்டது. இந்த நிலையில் இந்த வதந்தி குறித்து விளக்கம் அளித்து அப்துல் ஹமீது அவர்கள் வெளியிட்டுள்ள வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அந்த வீடியோவில் அவர் கூறியிருப்பதாவது:
மாண்டவர் மீண்டு வந்து பேசுகிறானே என்று சிலர் வியந்து போகலாம், நேற்று இலங்கை நேரப்படி நள்ளிரவு முதல் இந்த நிமிடம் வரை நான் நித்திரை கொள்ளவில்லை. அந்த விஷம செய்தியை கேட்டு ஆயிரம் பல்லாயிரம் அன்பு உள்ளங்கள் தொலைபேசியில் என்னை அழைத்து என் குரலை கேட்ட பின்பு தான் நான் உயிரோடு இருப்பதை நிச்சயம் செய்து கொண்டனர். அதிலும் சிலர் என் குரலை கேட்டதும் கதறி அழுவதை கேட்டு என்னால் தாங்க முடியவில்லை என கண்ணீர் தழும்ப அப்துல் ஹமீது தெரிவித்தார்.
இத்தனை ஆயிரம் அன்பு உள்ளங்களை நான் பெற என்ன தவம் செய்திருந்தேன் என்று எனக்கே தெரியவில்லை, நாம் இறந்த பிறகு நம்மீது உண்மையான அன்பு பாசம் வைத்திருந்தவர்கள் யார் யார் என்பதை பார்ப்பதற்கு நாம் இருக்க மாட்டோம், ஆனால் வாழும் காலத்திலேயே ஒரு முறை அதை அறிந்து கொள்ள இறைவன் கொடுத்த வாய்ப்பாகத்தான் நான் இதை கருதுகிறேன்.
இந்த செய்தியை முதன் முதலில் பரப்பியவருக்கு எத்தனையோ பேர் சாபமிட்டு இருக்கலாம். அந்த சாபங்களில் இருந்து அந்த மனிதரை காப்பாற்றும் படி அதே இறைவனிடம் நான் வேண்டுகிறேன். அவரும் ஒரு நன்மையை தான் எனக்கு செய்திருக்கிறார். எனக்காக பிரார்த்தனை செய்த அத்தனை உள்ளங்களுக்கும் என்னுடைய நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்’ என்று அப்துல் ஹமீது அந்த வீடியோவில் கூறியுள்ளார்.
#WATCH | வீடியோ வெளியிட்டு வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த தொகுப்பாளர் அப்துல் ஹமீது!#SunNews | #AbdulHameed pic.twitter.com/72A39eU9v8
— Sun News (@sunnewstamil) June 25, 2024
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com