ஆர்யா-சாயிஷா திருமண செய்தி வதந்தி! 'எங்க வீட்டு மாப்பிள்ளை' போட்டியாளர் திடுக் தகவல்
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகர் ஆர்யா, நடிகை சாயிஷாவை திருமணம் செய்து கொள்ளவிருப்பதாகவும் இருவீட்டார் சம்மதத்துடன் நடைபெறும் இந்த திருமணம் வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்தன.
இந்த நிலையில் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் கடந்த சில மாதங்களுக்கு முன் ஆர்யா நடத்திய 'எங்க வீட்டு மாப்பிள்ளை' என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் ஒருவரான அபர்நதி, 'ஆர்யா-சாயிஷா திருமண செய்தி 99% வதந்தி என்றும் ஆர்யா, சாயிஷா இருவரும் தங்களது சமூக வலைத்தள பக்கங்களில் இதுகுறித்த செய்தியை வெளியிட்டால் மட்டுமே இதனை நம்ப முடியும் என்றும் தெரிவித்துள்ளார். அவர் குறிப்பிட்டது போலவே இன்னும் ஆர்யாவும், சாயிஷாவும் தங்களது திருமணம் குறித்த பதிவு எதையும் தங்களது சமூக வலைத்தள பக்கங்களில் பதிவு செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அபர்நதி தற்போது வசந்தபாலன் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் நடிக்கும் படம் ஒன்றில் நாயகியாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments