அடித்தது ஜாக்பாட்: ஆர்யா சகோதரிக்கு எத்தனை கோடி பரிசு தெரியுமா?

  • IndiaGlitz, [Friday,February 05 2021]

நடிகர் ஆர்யாவின் சகோதரிக்கு ஜாக்பாட் பரிசாக 32 கோடி லாட்டரி சீட்டு பரிசு கிடைத்திருப்பது பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது.

பிரபல தமிழ் நடிகர் ஆர்யாவின் சகோதரி தஸ்லீனா தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்துகொண்டு கத்தார் நாட்டில் செட்டிலாகிவிட்டார். இவருக்கு மூன்று குழந்தைகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கத்தார் நாட்டில் விற்கப்படும் லாட்டரி சீட்டுக்களை இந்தியர்கள் உள்பட பலரும் விருப்பத்துடன் வாங்குவதில் ஆர்வம் காட்டுவார்கள். அந்த வகையில் ஜனவரி 26-ஆம் தேதி நடிகர் ஆர்யாவின் சகோதரி தஸ்லீனாவும் லாட்டரி சீட்டு ஒன்றை வாங்கியுள்ளார். இந்த லாட்டரி சீட்டின் முதல் பரிசு 15 மில்லியன் திர்காம் ஆகும். அதாவது இந்திய மதிப்பில் ரூபாய் 32 கோடி என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த லாட்டரியின் குலுக்கல் சமீபத்தில் நடைபெற்ற நிலையில் ஆர்யாவின் சகோதரி தஸ்லீனாவுக்கு முதல் பரிசாக ரூ.32 கோடி கிடைத்துள்ளது. இதனை அடுத்து அவர் தனது கணவர் மற்றும் குழந்தைகளுடன் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளார்.

இந்த லாட்டரி குலுக்கலில் இரண்டாவது மற்றும் மூன்றாவது பரிசும் இந்தியர்களுக்கு தான் கிடைத்துள்ளது என்பதும் இதில் இரண்டாவது பரிசை வென்ற பிரேம் என்பவர் சமீபத்தில்தான் வேலை இழந்து கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

நடிகர் ஆர்யாவின் சகோதரிக்கு ஜாக்பாட் பரிசாக ரூபாய் 32 கோடி பரிசு கிடைத்துள்ள தகவல் தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.