'கபாலி'யால் வாழ்க்கையின் முதல் அனுபவத்தை பெற்ற இளம் நடிகர்
Send us your feedback to audioarticles@vaarta.com
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் 'கபாலி' படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பிற்காக ரஜினிகாந்த் உள்பட படக்குழுவினர் அனைவரும் மலேசியா சென்றுள்ளனர் என்பது ஏற்கனவே அறிந்ததுதான்.
இந்நிலையில் விஜய்சேதுபதி நடித்த 'ஆரஞ்சு மிட்டாய்' படத்தில் ஆம்புலன்ஸ் டிரைவராக நடித்த ஆறுமுகம் பாலா, 'கபாலி' படத்தில் ஒரு கேரக்டரில் நடிக்கவுள்ளார் என்பதை ஏற்கனவே தெரிவித்திருந்தோம்.
இதனிடையே கபாலி' படப்பிடிப்பிற்காக மலேசியாவுக்கு விமானத்தில் சென்றதாகவும், தன்னுடைய வாழ்வில் தான் பயணம் செய்யும் முதல் விமானப்பயணம் இதுதான் என்றும் ஆறுமுகம்பாலா, தன்னுடைய சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார். ரஜினி படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது மட்டுமின்றி முதல் விமானப்பயண அனுபவத்தையும் பெற்றதால் ஆறுமுகம் பாலா மகிழ்ச்சியின் உச்சத்தில் இருக்கின்றார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout