நீங்க கம்முன்னு உம்முன்னு இருங்க: பிக்பாஸ் ஆர்த்தி
Send us your feedback to audioarticles@vaarta.com
சமீபத்தில் அஜித் பள்ளி ஒன்றுக்கு சென்றிருந்தபோது தன்னை வீடியோ எடுக்க முயன்றவரை அன்புடன் தடுத்தார் என்றும் அவர் பணிவாக கூறிய விதம் குறித்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்
இந்த நிலையில் இந்த வீடியோ குறித்து பிக்பாஸ் ஆர்த்தி தனது சமூக வலைத்தளத்தில் கூறுகையில், 'இந்த குணமா சொல்ற குணத்துக்கு தான் தல நீங்கள் எங்க "தல. உங்கள கடுப்பேத்தரவங்கள, காயப்படுத்தாத, உசுப்பேத்தரவங்க உதாசீனப்படுத்தாத குணத்ததாலதான் நீங்க ஜாம் ஜாம்னு இருக்கீங்க. எங்கள் அன்பும், இறைவன் ஆசீர்வாதங்களும் பல கோடி பெருகட்டும்!! என்று கூறியுள்ளார்.
இந்த டுவீட்டை கேலி செய்யும் வகையில் பதிவு செய்த ஒரு டுவிட்டர் பயனாளிக்கு ஆர்த்தி பதிலளித்தபோது, 'நீங்க கம்முன்னு உம்முன்னு இருங்க புரோ' என்று கூறியுள்ளார். சமீபத்தில் சர்கார் ஆடியோ விழாவில், 'உசுப்பேத்தறவங்ககிட்ட உம்முன்னும், கடுப்பேத்தறவங்ககிட்ட கம்முன்னும் இருந்தால் வாழ்க்கை ஜம்முன்னு இருக்கும்' என்று தளபதி விஜய் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments