நீங்க கம்முன்னு உம்முன்னு இருங்க: பிக்பாஸ் ஆர்த்தி

  • IndiaGlitz, [Saturday,October 06 2018]

சமீபத்தில் அஜித் பள்ளி ஒன்றுக்கு சென்றிருந்தபோது தன்னை வீடியோ எடுக்க முயன்றவரை அன்புடன் தடுத்தார் என்றும் அவர் பணிவாக கூறிய விதம் குறித்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்

இந்த நிலையில் இந்த வீடியோ குறித்து பிக்பாஸ் ஆர்த்தி தனது சமூக வலைத்தளத்தில் கூறுகையில், 'இந்த குணமா சொல்ற குணத்துக்கு தான் தல நீங்கள் எங்க தல. உங்கள கடுப்பேத்தரவங்கள, காயப்படுத்தாத, உசுப்பேத்தரவங்க உதாசீனப்படுத்தாத குணத்ததாலதான் நீங்க ஜாம் ஜாம்னு இருக்கீங்க. எங்கள் அன்பும், இறைவன் ஆசீர்வாதங்களும் பல கோடி பெருகட்டும்!! என்று கூறியுள்ளார்.

இந்த டுவீட்டை கேலி செய்யும் வகையில் பதிவு செய்த ஒரு டுவிட்டர் பயனாளிக்கு ஆர்த்தி பதிலளித்தபோது, 'நீங்க கம்முன்னு உம்முன்னு இருங்க புரோ' என்று கூறியுள்ளார். சமீபத்தில் சர்கார் ஆடியோ விழாவில், 'உசுப்பேத்தறவங்ககிட்ட உம்முன்னும், கடுப்பேத்தறவங்ககிட்ட கம்முன்னும் இருந்தால் வாழ்க்கை ஜம்முன்னு இருக்கும்' என்று தளபதி விஜய் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

கடல் கடந்த அங்கீகாரம் பெற்ற ஜிவி பிரகாஷ் படம்

கோலிவுட் திரையுலகில் அதிக படங்களில் நடித்து கொண்டிருக்கும் நடிகர்களில் ஒருவர் ஜிவி பிரகாஷ். நாயகனாக நடிப்பது மட்டுமின்றி அவர் நடிக்கும் பெரும்பாலான படங்களுக்கு இசையும் அமைத்து வருகிறார்

கார்த்தியின் அடுத்த படத்தை இயக்கும் கமல் பட இயக்குனர்

கமல்ஹாசன், கவுதமி நடிப்பில் ஜித்துஜோசப் இயக்கிய படம் 'பாபநாசம்'. மோகன்லால் நடித்த 'த்ரிஷ்யம்' படத்தின் ரீமேக்கான இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்று ரூ.100 கோடி கிளப்பில் இணைந்தது.

செல்பி கேட்ட ரசிகர்கள்: குணமா, அன்பா மறுத்த அஜித்

தல அஜித்தின் திரைப்படங்கள் குறித்தும், நடிப்பு குறித்தும் மாறுபட்ட விமர்சனங்கள் வந்தாலும் அவருடைய மனிதநேயம் குறித்து அனைவருக்குமே ஒருவித மரியாதை இருப்பது உண்மை.

வைரலாகும் ரஜினியின் முறுக்குமீசை வீடியோ

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் 'பேட்ட' படத்தின் செகண்ட்லுக் சமீபத்தில் வெளிவந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த போஸ்டரில் ரஜினி முறுக்குமீசை தோற்றத்துடன் கள்ளங்கபடம் இல்லாத புன்சிரிப்புடன் தோற்றமளித்தார்.

பாஜகவுடன் கூட்டணி அமைக்க தயக்கமில்லை: கமல்ஹாசன்

நடிகர் கமல்ஹாசன் கடந்த பிப்ரவரி மாதம் அரசியல் கட்சி ஒன்றை ஆரம்பித்து தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து வருகிறார்.