close
Choose your channels

சாதிக்க நினைக்கும் பெண்களுக்கு எடுத்துக்காட்டு: ரித்விகாவை வாழ்த்திய பிரபலம்

Monday, October 1, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் 2 நிகழ்ச்சியின் 16 போட்டியாளர்களில் ஒருவரான ரித்விகா, ஆரம்பத்தில் அமைதியாக, கலகலப்பின்றி இருந்தார். அவர் பிக்பாஸ் வீட்டில் இருப்பதே தெரியவில்லை என்று கூட ஒருசிலர் குற்றஞ்சாட்டினர்.

ஆனால் நான்கு வாரங்களுக்கு பின் அவர் சக போட்டியாளர்களுடன் செட்டான பின்னர் தனது புத்திசாலித்தனத்தை வெளிப்படுத்தினார். டாஸ்க்கில் நேர்மையாக விளையாடியதும், கமல்ஹாசன் தோன்றும் சனி, ஞாயிறு ஆகிய நாட்களில் அவர் செயல்பட்ட விதமும் அவர் மீது மக்களின் கவனம் விழுந்தது. எனவேதான் பலமுறை நாமினேட் செய்யப்பட்டும் மக்களால் காப்பாற்றப்பட்டார்.

அவரது நேர்மைக்கும் இயல்பான தன்மைக்கும் கிடைத்த பரிசுதான் நேற்று அவருக்கு கிடைத்த பிக்பாஸ் டைட்டில் மற்றும் ரூ.50 லட்சம் பரிசு.

இந்த நிலையில் பிக்பாஸ் 1 பிரபலமாகிய ஆர்த்தி, ரித்விகாவின் வெற்றி குறித்து தனது சமூக வலைத்தளத்தில் குறிப்பிடுகையில், 'வெற்றி பெற்ற ரித்துவுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்... பிக்பாஸ் 2-ன் இந்த வெற்றி, சாதாரண குடும்பத்தில் பிறந்து வளர்ந்து சாதிக்க நினைக்கும் பெண்களளுக்கு எடுத்துக்காட்டாய் அமையும்.. ஆசீர்வாதங்கள் தொடரட்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment