மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் ஜூலி-ஆர்த்தி?
Send us your feedback to audioarticles@vaarta.com
பிக்பாஸ் வீட்டில் நேற்று ரைசா வெளியேறிவிட்டதால் தற்போது வீட்டின் உள்ளே புதிய வரவுகள் நான்கு பேர், பழைய பங்கேற்பாளர்கள் நான்கு பேர் என எட்டு பேர் உள்ளனர். இந்த நிலையில் இன்று மீண்டும் இரண்டு புதிய வரவுகள், இல்லை பழைய பங்கேற்பாளர்கள் பிக்பாஸ் வீட்டில் செல்லவுள்ளனர்.
நேற்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியில், வீட்டில் இருந்து வெளியேறிய ஆர்த்தி, ஜூலி, காயத்ரி, சக்தி மற்றும் பரணி கலந்து கொண்டனர். இவர்களில் இருவர் இன்று பிக்பாஸ் வீட்டில் நுழையவுள்ளதாக கமல் கூறினார். ஆனால் பரணி தன்னுடைய உறவினர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதால் தற்போது செல்ல முடியாது என்று கூறிவிட்டார். அதேபோல் சக்தி மற்றும் காயத்ரி ஆகிய இருவருமே மீண்டும் வீட்டிற்குள் செல்ல விருப்பமில்லை என்று கூறிவிட்டனர். எனவே இன்று வீட்டிற்குள் செல்லும் அந்த இரு நபர்கள் ஜூலி மற்றும் ஆர்த்தியாகத்தான் இருக்க வேண்டும் என்பது அனைவரின் கணிப்பாக உள்ளது.
ஓவியாவின் வெளியேற்றத்திற்கு முக்கிய காரணமானவருமானரும், பார்வையாளர்களிடம் அதிக வெறுப்பை சம்பாதித்து கொண்டவருமான ஜூலி மீண்டும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வது ஏற்கனவே அதலபாதாளத்தை நோக்கி சென்று கொண்டிருக்கும் இந்த நிகழ்ச்சிக்கு மேலும் ஒரு மைனஸ் ஆக பார்க்கப்படுகிறது. நேற்றைய நிகழ்ச்சியில் ஓவியாவிடம் தான் மன்னிப்பு கேட்டதாக ஜூலி கூறினாலும் இன்னும் அவர் மிதிருந்த வெறுப்பு குறையவில்லை என்பது ஓவியா ஆர்மியினர்களின் டுவிட்டுகளில் இருந்து தெரியவருகிறது.
அதே சமயத்தில் ஆர்த்தி மீது பார்வையாளர்களுக்கு மதிப்பு ஏற்பட்டுள்ளது. ஜூலியை அவர் ஃபேக் என்று கூறியது உண்மை என்று பின்னர் உணர்ந்து கொண்ட பார்வையாளர்கள் நேற்றைய நிகழ்ச்சியின்போது கேன்சர் நோயாளிகளுக்காக தனது தலைமுடியை தானமாக கொடுத்ததாக கூறியது அவர் மீதான மதிப்பை மேலும் உயர்த்தியுள்ளது. இருப்பினும் எதிரும் புதிருமான ஜூலி-ஆர்த்தி மீண்டும் பிக்பாஸ் வீட்டின் உள்ளே செல்வதால் விறுவிறுப்பு அதிகரிக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
#VivoBiggBoss வீட்டில் இன்று..@Vivo_India #BiggBossTamil pic.twitter.com/BRQhMpErkK
— Vijay Television (@vijaytelevision) August 28, 2017
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com