இவர்தான் டைட்டில் வின்னர்: தமிழ் திரைப்பட இசையமைப்பாளரின் பதிவு!
Send us your feedback to audioarticles@vaarta.com
பிக்பாஸ் டைட்டில் வின்னராக ஆரி, பாலாஜி, ரியோ ஆகிய மூவருக்கும் அதிக வாய்ப்பு இருப்பதாக பார்வையாளர்கள் பலர் கணித்துள்ள நிலையில் இதுகுறித்து தமிழ் திரைப்பட இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் தனது சமூக வலைத்தளத்தில் ஒரு கருத்தை பதிவு செய்துள்ளார். அதில் அவர் ஆரி தான் டைட்டில் வின்னர் என்று தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:
ஆரி டைட்டில் வின்னர். அது வேறு விஷயம். ஆனால், இவர் அனைவரின் பகைமையை தேடி கொண்டு அதை எப்படி சிறப்பாக சமாளிக்கின்றார் என்பது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது!
ஒரு வீட்டில் அனைவரும் உங்களை வெறுத்து, குற்றம்சாட்டி, உங்களுக்கு எதிராக திட்டம் தீட்டி செயல்படும் நபர்கள் நடுவில் இருக்க நிச்சயம் நான் விரும்பமாட்டார்கள். அப்படி இருப்பதை கற்பனை கூட செய்து பார்க்க முடியவில்லை. ஆனால் இதையெல்லாம் சமாளித்து ஆரி 75 நாட்களாக இருந்து வருகிறார் என்றால் உண்மையிலேயே ஆச்சரியம் தான்.
மேலும் ஆரி இன்னும் ஒவ்வொருவரின் தகுதிகள் குறித்து விவாதித்து வருகிறார். அப்போது அவரைச் சுற்றியுள்ளவர்கள் அவரை விமர்சனரீதியாக தாக்குதல் நடத்துகிறார்கள்.
வெளியுலகம் தெரியாமல் அடைக்கப்பட்டிருக்கும் ஒரு வீட்டில், வழக்கமான உலகத்திலிருந்து தனிமைப்படுத்தப்பட்ட ஒரு வீட்டில், உணர்ச்சிகள் கொந்தளிக்கின்றன. ஈகோக்கள் பெருகுகின்றன. சுயமரியாதை போராட்டமும் அவ்வப்போது நடக்கின்றது. ஆனாலும் ஆரியின் எண்ணங்கள், திட்டங்கள், உத்திகளை பார்க்கும்போது, அவர் ஒரு இரும்பு மனிதனை போல் உள்ளார். சிலருக்கு இது சுலபமான ஒன்றாக தெரியலாம், ஆனால் நான் அவரை பார்த்து வியப்படைகிறேன். இவ்வாறு இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் கூறியுள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com