பிக்பாஸ் டைட்டில் வின்னராக ஆரி அறிவிப்பு: கோப்பையை வழங்கினார் கமல்!

  • IndiaGlitz, [Sunday,January 17 2021]

பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த 105 நாட்களாக நடைபெற்ற நிலையில் இன்று மாலை 6 மணி முதல் ஃபினாலே நிகழ்ச்சி மிகவும் பிரமாண்டமாக நடைபெற்றது. கிரேண்ட் ஃபினாலே நிகழ்ச்சிக்காக ஸ்பெஷலாக அமைக்கப்பட்டிருந்த மேடையில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றிருந்த ஆரி, மற்றும் பாலாஜி ஆகிய இருவரும் அழைக்கப்பட்டனர்.

இதில் முதலில் ரியோ மூன்றாவது இடத்திற்கு தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டவுடன் பிக்பாஸ் டைட்டில் வின்னர் ஆரி அல்லது பாலாஜி ஆகிய இருவரில் ஒருவர் என்பது உறுதியானது. இதனை அடுத்து அதிக வாக்குகள் வித்தியாசத்தில் பிக்பாஸ் சீசன் 4 டைட்டில் வின்னர் ஆரி என கமலஹாசன் அதிகாரபூர்வமாக அறிவித்தார். இதனையடுத்து அவருக்கு பிக்பாஸ் சீசன் 4 கோப்பை வழங்கப்பட்டதோடு, 50 லட்ச ரூபாய்க்கான காசோலையும் அளிக்கப்பட்டது

கடந்த 105 நாட்களாக நேர்மையாக விளையாடிய ஆரிக்கு கிடைத்த மிகப்பெரிய பரிசாக இந்த டைட்டில் கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. பிக்பாஸ் டைட்டிலை வெல்வது அன்பா? நேர்மையா? என கடைசிவரை நடந்த போட்டியில் இறுதியில் நேர்மையே வென்றது என ஆரியின் ஆர்மியினர் கமெண்ட்ஸ்களை பகிர்ந்து வருகின்றனர். இதனை அடுத்து ஆரிக்கு சக போட்டியாளர்கள் மற்றும் ரசிகர்கள் ஏராளமானோர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்

இதனை அடுத்து ரசிகர்களின் பேராதரவுடன் கடந்த நூறு நாட்களுக்கு மேல் நடைபெற்று வந்த பிக்பாஸ் நிகழ்ச்சி இத்துடன் நிறைவு பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது