அடுத்த படம் குறித்த அப்டேட் தந்த பிக்பாஸ் வின்னர் ஆரி!

  • IndiaGlitz, [Thursday,March 04 2021]

சமீபத்தில் முடிவடைந்த பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியின் வின்னர் ஆரி ’அலேகா’, ‘பகவான்’ மற்றும் ’எல்லாம் மேல இருக்குறவன் பாத்துக்குவான் ஆகிய மூன்று படங்களில் நடித்து வருகிறார் என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் அவர் நடித்து வரும் படங்களில் ஒன்று ‘பகவான்’. இந்த படத்தின் மோஷன் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ‘பகவான்’ படத்தின் அப்டேட் குறித்து தனது இன்ஸ்டாகிராமில் ஆரி தெரிவித்துள்ளார்.

‘பகவான்’ படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு இன்று முதல் தொடங்குவதாகவும் திருவண்ணாமலை அருகே உள்ள செஞ்சிக் கோட்டையில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து ஆரிக்கு அவரது ரசிகர்களும் ஆர்மியினர்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

கலைஞன் இயக்கத்தில் பிரசன் பாலா இசையில் முருகேசன் சரவணன் ஒளிப்பதிவில் அதுல்விஜய் படத்தொகுப்பில் இந்த படம் உருவாகி வருகிறது.