ஆரியை பார்த்து 'சார் யாரு? என கேட்ட நபர்: வைரல் வீடியோ

  • IndiaGlitz, [Tuesday,April 13 2021]

கொரனோ விழிப்புணர்வு ஏற்படுத்திய ஆரியை பார்த்து ஒரு நபர் ’சார் யாரு? என்று கேட்ட வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது

தமிழகத்தில் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் மாஸ்க் அணிவது குறித்த விழிப்புணர்வை மத்திய மாநில அரசுகள் ஏற்படுத்தி வருகிறது. அது மட்டுமின்றி திரையுலக பிரபலங்கள் பலரும் மாஸ்க் அணிந்து வெளியே செல்லுங்கள் என்று அறிவுறுத்தி வருகின்றனர்

இந்த நிலையில் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியின் வின்னரான ஆரி மாஸ்க் அணியாமல் வெளியே செல்பவர்களுக்கு மாஸ்க்கை கொடுத்து இனிமேல் மாஸ்க் அணிந்து செல்ல வேண்டும் என்று அறிவுறுத்தும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

இந்த நிலையில் கிராம பகுதி ஒன்றுக்கு ஆரி சென்று அங்கு வயதான ஒருவர் மாஸ்க் அணியாமல் இருந்ததை பார்த்து அவருக்கு ஆரியே மாஸ்க் அணிவித்தார். அப்போது அருகில் நின்ற ஒரு நபர் ’சார் யார்? என்று கேட்க அதற்கு ஆரியுடன் வந்தவர் ’பிக்பாஸ் ஆரி’ என்று கூறியவுடன் அவரா இவர்? என்று ஆச்சரியத்துடன் அந்த நபர் பார்த்தார். இதுகுறித்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது

ஆரி மாஸ்க் கொடுத்து உதவி செய்த வீடியோவை பார்த்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் ஒருவரான சனம் தனது ட்விட்டரில் ஆரிக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்