மகள் பிறந்த நாளில் ஆரி கொடுத்த ஆக்கபூர்வமான பரிசு!
Send us your feedback to audioarticles@vaarta.com
பிக்பாஸ் நிகழ்ச்சியின் வின்னரான ஆரி, பிக்பாஸ் நிகழ்ச்சியின் போதும் சரி, நிகழ்ச்சிக்கு பின்னரும் சரி ஆக்கபூர்வமான கருத்துக்களை தெரிவித்து வருகிறார் என்பதை பார்த்து வருகிறோம். குறிப்பாக அவர் விவசாயம் குறித்து பெருமை உரிய விஷயங்களை தெரிவித்து வருகிறார் என்பதும், அவரது அறிவுரையின்படி தான் பாலாஜியே விவசாயம் செய்யவிருப்பதாக அறிவித்தார் என்பதும் தெரிந்ததே.
இந்த நிலையில் இன்று ஆரியின் மகள் ரியாவின் பிறந்தநாளை அடுத்து அவருக்கு வாழ்த்து தெரிவித்த ஆரி, விதைகளை பரிசாக கொடுத்து இருக்கின்றார். அந்த விதைகளை ஆரியின் மகள் விதைக்கும் புகைப்படத்தையும் ஆரி தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது: பிறந்தநாள் வாழ்த்துக்கள் ரியா. இன்று நாம் விதைக்கும் ஒரு விதை நாளைய உணவுக்கான மூலதனம் ஆகும். நானும் ஒரு விவசாயி தான். நம்முடைய சொந்த உணவு தேவைகளை நாமே வளர்த்துக் கொள்வோம். எங்கள் வீட்டில் ஒரு சிறிய மாடி தோட்டம் ஏற்பாடு செய்திருக்கிறோம்’ என்று கூறியுள்ளார்.
இவ்வளவு சிறிய வயதிலேயே விவசாயம் பற்றிய அறிவை தனது மகளுக்கு கற்பித்து வரும் ஆரிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. மேலும் தனது மகளுக்கு ஆக்கப்பூர்வமான பரிசு கொடுத்த ஆரிக்கு வாழ்த்துக்துகள் என்றும் நெட்டிசன்கள் தெரிவித்து வருகின்றனர்
Happy birthday Riya.
— Aari Arjunan (@Aariarujunan) February 5, 2021
A seed today is a food source for tomorrow. Naanum Oru Vivasayi..
Let's grow our own food needs. Our little terrace gardening.. #Marvommaatruvom pic.twitter.com/sRu9EmbhUk
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments