பிக்பாஸ் டைட்டில் வின்னர் ஆரியின் முதல் வீடியோ!

பிக்பாஸ் நிகழ்ச்சி 105 நாட்கள் நடந்த நிலையில் நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் ஆரி டைட்டில் வின்னர் ஆக தேர்வு செய்யப்பட்டார் என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் பிக்பாஸ் டைட்டில் வென்ற ஆரி தனது டுவிட்டரில் முதல் முதலாக ’எல்லா புகழும் உங்களுக்கே’ என்று பதிவு செய்த நிலையில் தற்போது அவர் வீடியோ ஒன்றையும் பதிவு செய்துள்ளார்

அந்த வீடியோவில் அவர் கூறியிருப்பதாவது: மாதா பிதா குரு தெய்வத்திற்கு வணக்கம். நான் பேசும் என் தாய்மொழி தமிழுக்கு முதல் வணக்கம். இந்த பிக்பாஸ் வீட்டில் எனக்கு கிடைத்த வெற்றி, என்னுடைய வெற்றி அல்ல. உங்களுடைய வெற்றி. உழைக்கும் வர்க்கத்திற்கு கிடைத்த வெற்றி. உழைக்கும் சமுதாயத்திற்கு கிடைத்த வெற்றி. உழைக்கும் மக்களுக்கு கிடைத்த வெற்றி.

இந்த வாரம் என்னுடைய அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் உங்களை நான் சந்திக்கிறேன் என்று கூறியுள்ளார். மேலும் அவரது அருகில் பிக்பாஸ் கோப்பையும் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. பிக்பாஸ் டைட்டில் பட்டத்தை வென்ற பின்னர் ஆரி பதிவு செய்துள்ள இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

More News

குழந்தைகள் உண்ணும் ஐஸ்கிரீமிலும் கொரோனா வைரஸா? பதைக்க வைக்கும் தகவல்!

கொரோனா வைரஸ் பொருட்களின் மேற்பரப்புகளில் தங்கி இருக்கும் என்ற தகவலை கடந்த ஜனவரி மாதத்திலேயே விஞ்ஞானிகள் கண்டுபிடித்து விட்டனர்.

கவர்ச்சி உடையில் மீண்டும் சமூக வலைத்தளத்தில் ஷிவானி: ஆரிக்கு அளித்த மெசேஜ்!

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு முன்னரே சமூக வலைதளங்களில் கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியவர் தொலைக்காட்சி நடிகை ஷிவானி நாராயணன்.

என் தோல்விக்கான காரணம் இதுதான்: பாலாஜி முருகதாஸ்

பிக்பாஸ் தமிழ் சீசன் 4 நிகழ்ச்சியில் ஆரி வின்னராகவும் பாலாஜி ரன்னராகவும் தேர்வு பெற்றனர் என்பதும் இருவருக்குமே வாழ்த்துக்கள் குவிந்தது என்பதும் தெரிந்ததே

கடற்கரையில் கருப்பு உடையில் கவர்ச்சியில் கலக்கும் பிக்பாஸ் ஜூலி: வைரல் புகைப்படங்கள்!

பிக்பாஸ் சீசன் 4 நேற்று முடிவடைந்த நிலையில் முந்தைய பிக்பாஸ் போட்டியாளர்கள் அவ்வப்போது தங்களது சமூக வலைதளங்களில் கவர்ச்சியான புகைப்படங்களையும் வீடியோக்களையும் பதிவு செய்து கலக்கி வருகிறார்கள்

சென்னையில் வீடு இல்லாதவர்களுக்கு சொந்த வீடு… அதிரடி காட்டும் தமிழக முதல்வர் எடப்பாடி!

சென்னையில் எம்.ஜி.ஆர் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டத்தில் பேசிய தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, “சென்னையில் வீடு இல்லாதவர்களுக்கு அதிமுக அரசு வீடு கட்டிக் கொடுக்கும்