ஆஸ்திரேலியா மைதானம் வரை சென்ற ஆரியின் டைட்டில் வின்னர் பதாகை!

பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த 98 நாட்களாக நடைபெற்று வரும் நிலையில் முதல் மூன்று வாரம் முடிந்த பின்னர் ஆரி தான் டைட்டில் வின்னர் என்பது கிட்டத்தட்ட தெரிந்து விட்டது. அப்போது முதல் இன்று வரை அவருக்கு இருக்கும் ஆதரவாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது என்பதும் ஒவ்வொரு முறை அவர் நாமினேட் செய்யப்படும் போது முதலில் சேவ் செய்யப்படுகிறார் என்பதையும் பார்த்து வருகிறோம்.

இந்த நிலையில் தமிழகம், இந்தியா தாண்டி ஆஸ்திரேலியாவிலும் ஆரிதான் டைட்டில் வின்னர் ஆக வேண்டும் என அவரது ரசிகர்கள் பதாகையை காண்பித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தற்போது இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் மூன்றாவது கிரிக்கெட் போட்டியில் பார்வையாளர்களாக கலந்து கொண்ட ஆரியின் ரசிகர்கள் ’பிக்பாஸ் சீசன் 4 டைட்டில் வின்னர் ஆரிதான்’ என்றும் ’கடவுள் இருக்கான் குமாரு’ என்றும் பதாகைகளில் எழுதி காண்பித்துள்ள வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

ஆரி தான் டைட்டில் வின்னர் என்று கடல் கடந்து அவரது ஆர்மியினர் ஆதரவு அளித்து வருவது பிக்பாஸ் நிகழ்ச்சி குழுவினர்களுக்கே ஆச்சரியமான ஒன்றுதான்!
 

More News

கமல் சொன்னதை கேட்டு உணர்ச்சிவசப்பட்டு கதறியழுத பாலாஜி!

பிக்பாஸ் நிகழ்ச்சி இதுவரை 97 நாட்கள் முடிவடைந்து தற்போது 98 ஆவது நாள் இன்று நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ஏற்கனவே இறுதிப்போட்டிக்கு டிக்கெட் டு ஃபினாலே

விஜய்யின் அடுத்த படத்தை இயக்கினால் இது மூன்றும் இருக்காது: லோகேஷ் கனகராஜ்

'மாநகரம்' என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் இயக்குனராக அறிமுகமான இயக்குனர் லோகேஷ் கனகராஜ், அதன் பின்னர் 'கைதி' என்ற வெற்றி திரைப்படத்தை இயக்கினார்

தமிழ்நாட்டின் ஆபிரகாம் லிங்கன் எடப்பாடி பழனிசாமி… பொள்ளாச்சி ஜெயராமன் புகழாரம்!!!

தமிழ்நாட்டின் ஆபிரகாம் லிங்கன் நம்ம முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி என புகழ்ந்து பேசியுள்ளார்

11 பேர் கொண்ட அதிமுக வழிகாட்டுதல் குழுவுக்கு பொதுக்குழு ஒப்புதல்!!!

11 பேர் கொண்ட வழிகாட்டுதல் குழுவிற்கு அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் ஒப்புதல் அளித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.

விலையில்லா டேட்டா கார்டு, தினமும் 2ஜிபி இலவசம்: முதல்வரின் அசத்தல் அறிவிப்பு!

இணைய வழி வகுப்புகளில் மாணவர்கள் கலந்துகொள்ள ஏதுவாக அரசு கல்லூரி, அரசின் உதவி பெறும் சுய நிதி கல்லூரி மாணவர்களுக்கு வரும் ஏப்ரல் வரை நாளொன்றுக்கு 2 GB டேட்டா இலவசம்