முதல்முறையாக கண்கலங்கி பாலாஜியிடம் மன்னிப்பு கேட்ட ஆரி!
Send us your feedback to audioarticles@vaarta.com
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இதுவரை ஆரியிடம் பாலாஜி மன்னிப்பு கேட்பதை வாரத்திற்கு ஒருமுறையோ, இருமுறையோ வழக்கமாக வைத்திருந்தார் என்று சொல்லலாம். ஆனால் முதல் முறையாக பாலாஜியிடம் கண்கலங்கி வருத்தம் தெரிவித்து ஆரி மன்னிப்பு கேட்டது பார்ப்பவர்களை நெகிழ்ச்சியடைய செய்துள்ளது.
நேற்று முதல் நடந்து வரும் ரோப் இழுக்கும் போட்டியில் பாலாஜியை ரோப்பில் இருந்து கையை எடுத்தவுடன் ஆரி சில கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தினார். அதனால் ரோசப்பட்ட பாலாஜி கயிற்றில் இருந்து கையை எடுத்துக் கொண்டு அவுட்டாகி வெளியேறினார்.
ஒரு வேளை ஆரி அந்த வார்த்தைகளை பேசாமல் இருந்திருந்தால் கண்டிப்பாக பாலாஜி அந்த டாஸ்க்கில் வெற்றிபெற்று ஏழு புள்ளிகளை பெற்று இருப்பார். இந்த நிலையில் இந்த டாஸ்க் முடிந்தவுடன் புள்ளிகளை பார்த்த ஆரி கண் கலங்கி ’நான் அவ்வாறு பேசியதால்தான் நீ கையை விட்டு விட்டாய், ஆனால் ஏற்கனவே கையை விட்டவர்களுக்கெல்லாம் புள்ளிகள் கிடைத்திருக்கிறது. அப்படியென்றால் ரூல்ஸ் எல்லாம் அந்த பேப்பரோடு சரி போல் இருக்கின்றது என்று கண் கலங்கி வருத்தமடைந்து பாலாஜியிடம் ஆரி மன்னிப்பு கேட்டார்.
பாலாஜி அதை மென்மையாக எடுத்துக்கொண்டு ’சரி விடுங்கள் பரவாயில்லை முடிந்தது முடிந்துவிட்டது’ என்று ஆறுதல் கூறினார். இதனை அடுத்து இருவரும் மனம் விட்டு பேசும் காட்சிகள் இருந்தன. அதன் இறுதியில் ’நான் இதுவரை உங்களிடம் மரியாதைக் குறைவாக நடந்த அனைத்துக்கும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன், வெளியே வந்தாலும் உங்களிடம் நான் ஆலோசனைகள் கேட்பேன் என்று கூற ஆரியும் ‘கண்டிப்பாக நானும் என்னால் முடிந்ததை செய்கிறேன் என்று கூறியதை அடுத்து இருவரும் நெருக்கமான நண்பர்களாகி விட்டனர்.
இதனை சுட்டிக் காட்டிய கமல்ஹாசன் ’கடைசி நேரத்தில் என்றாலும் பாலாஜியிடம் ஒரு நல்ல மாற்றம் ஏற்பட்டுள்ளது என்றும் இந்த மாற்றம் அவர்களுக்கு மட்டுமின்றி பார்க்கும் அனைவருக்கும் ஏற்படும் என்றும் கூறினார்.
இந்த பிக்பாஸ் சீசனில் நடந்த ஒரே உருப்படியான சம்பவம் இதுதான் என்று பார்வையாளர்களும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout