ஜல்லிக்கட்டு ஆர்ப்பாட்டம். பிரபல நடிகர் கைது
Send us your feedback to audioarticles@vaarta.com
ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி இன்று அலங்காநல்லூரில் நடந்த அமைதி பேரணியில் கலந்து கொள்ள சென்றிருந்த பிரபல நடிகர் ஆரி கைது செய்யப்பட்டு ஒரு மணி நேரத்திற்கு பின்னர் விடுவிக்கப்பட்டார்.
இதுகுறித்து அவர் தனது சமூக வலைத்தளத்தில் கூறியிருப்பதாவது: நான் சிறு வயதில் இருந்தே அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டை பார்த்து வளர்ந்தவன். அந்த வகையில் என்னுடைய உணர்வை வெளிப்படுத்த இன்று அலங்காநல்லூரில் நடைபெறும் அமைதிப்பேரணியில் கலந்து கொள்ள சென்றேன். ஆனால் மதுரை அருகே ஊமச்சிக்குளம் என்ற இடத்தில் எங்களுடைய கார் நிறுத்தப்பட்டது. காரை நிறுத்திவிட்டு நடந்து சென்றபோது போலீசாரால் தடுக்கப்பட்டோம். போலீசாருடன் வாக்குவாதம் செய்து பேரணியை நோக்கி சென்றபோது போலீசார் எங்களை கைது செய்தனர்.
அதன்பின்னர் ஒருமணி நேரம் கழித்து எங்களை விடுதலை செய்து அமைதிப்பேரணியில் கலந்து கொள்ள அனுமதித்தனர். நானும் இயக்குனர் அமீரும் கலந்து கொண்டோம். அலங்காநல்லூர் பேரணியில் நாங்கள் மட்டுமின்றி ஆயிரக்கணக்கான இளைஞர்கள் கலந்து கொண்டது எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. அந்த நேரத்தில் திடீரென இளைஞர்களால் காளைகள் அவிழ்த்துவிடப்பட்டதால் அங்கு அசாதாரண நிலை இருந்தது. இதனால் போலிசார் தடியடி நடத்தினர். நானும் இயக்குனர் அமீரும் ஒரு வீட்டில் தஞ்சம் அடைந்தோம். பின்னர் நிலைமை சரியானதும் வெளியே வந்தோம்' என்று ஆரி கூறியுள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Contact at support@indiaglitz.com
Comments