'டிக்கெட் டு ஃபினாலே' டாஸ்க் குறித்து ஆரி ஸ்பீச்: அதிர்ச்சியில் சோம்!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த வாரம் ’டிக்கெட் டு ஃபினாலே’ என்ற டாஸ்க் நடைபெற்றது என்பதும் இந்த டாஸ்க்கில் மிகச் சிறப்பாக விளையாடி அதிக புள்ளிகள் பெற்று சோம் வெற்றி பெற்றார் என்பதும் தெரிந்ததே. அதே நேரத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் முதல் நாளில் இருந்து சிறப்பாக விளையாடி வரும் ஆரி, இந்த ’டிக்கெட் டு ஃபினாலே’ டாஸ்கில் கடைசி இடம் பெற்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ’டிக்கெட் டு ஃபினாலே’ டாஸ்க் குறித்து ஆரி பேசிய பேச்சு சோம்சேகரை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது என்பதை மூன்றாம் புரமோவில் இருந்து தெரிய வருகிறது. ஆரி இதுகுறித்து கூறியபோது, ‘டிக்கெட் டு ஃபினாலே’ யாராவது ஒருத்தருக்கு தான் கிடைக்கும். இந்த ஒரு வாரம் சரியாக இருந்து நான் ’டிக்கெட் டு ஃபினாலே’ மூலம் ஃபைனலுக்கு போக வேண்டுமா? அல்லது 91 நாள் நான் சரியாக இருந்ததற்காக நான் ஃபைனலுக்கு போகப் போக வேண்டுமா? என்ற கேள்வி என்னிடம் இருந்தது. நான் 100% நேர்மையாக இருந்ததற்காக எனக்கு கிடைத்த ஒரு விஷயமாக தான் நான் இதை பார்க்கிறேன்’ என்று ஆரி கூறினார்

இதேபோல் பாலாஜி இந்த டாஸ்க் குறித்து கூறிய போது ’நான் கேமை கேமாகத்தான் பார்த்தேன். அதை தாண்டி எதுவுமே பார்க்கவில்லை. 11 பேர் எனக்கு எதிராக பேசும்போது எனக்கு ரொம்ப மகிழ்ச்சியாக இருந்தது. நான் அதை ரொம்பவே என்ஜாய் பண்ணினேன். மேலும் எந்த வகையிலும் பெண்கள் குறைவு கிடையாது என அந்த பாட்டு வரும் போது எனக்கு தெரிந்தது’ என்று பாலாஜி கூறினார்

பாலாஜி மற்றும் ஆரி ஆகிய இருவரும் மாறி மாறி ’டிக்கெட் டு ஃபினாலே’ டாஸ்க் குறித்து பேசியபோது சோம்சேகரின் முகம் இறுகி அதிர்ச்சியில் இருந்ததை பார்க்க முடிகிறது