நடிகரை அடுத்து ஆரவ் எடுத்த அடுத்த அவதாரம்

  • IndiaGlitz, [Friday,December 28 2018]

பிக்பாஸ் முதல் சீசனின் வின்னர் ஆரவ், தற்போது 'ராஜபீமா' என்ற படத்தில் ஹீரோவாக நடித்து கொண்டிருக்கின்றார் என்பது தெரிந்ததே. இந்த படத்தில் ஓவியா ஒரு முக்கிய தோற்றத்தில் நடிப்பதோடு ஆரவ்வுடன் ஒரு குத்து பாடலுக்கும் நடனமாடியுள்ளார்.

இந்த நிலையில் 'ராஜபீமா' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தில் ஆரவ் தனது சொந்தக்குரலில் ஒரு பாடலை பாடி, பாடகர் என்ற புதிய அவதாரத்தையும் எடுத்துள்ளார். சைமன் இசையமைப்பில் உருவான இந்த பாடல் உள்பட இந்த படத்தின் அனைத்து பாடல்களும் விரைவில் வெளியாகவுள்ளது.

நரேஷ் சம்பத் இயக்கத்தில் எஸ்.மோகன் தயாரிக்கும் இந்த படம் ஒரு மிருக முரண்பாடுகளை பற்றி உருவாக்கப்பட்ட கதையம்சம் கொண்ட படம் என்றும், நகர்ப்புற பின்னணியில் படமாக்கப்படும் மனிதன் - விலங்கு சார்ந்த படம் என்றும் கூறப்படுகிறது.

More News

த்ரிஷாவுடன் நடிக்கும் நயன்தாரா மகள்

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்த வெற்றிப்படங்களில் ஒன்றான 'இமைக்கா நொடிகள்' திரைப்படம் கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியாகி ரசிகர்களின் மாபெரும் வரவேற்பை பெற்றது

எந்த நட்சத்திரத்தைப் போல் கணவர் அமைய வேண்டும்?- கீர்த்தி சுரேஷ் பதில்

நடிகை கீர்த்தி சுரேஷ் கோலிவுட் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்து வருவது தெரிந்ததே.

மும்பை மாரத்தானில் கலந்து கொள்ளும் அஜித்-விஜய் நாயகி

இந்தியாவின் பிரபல நிறுவனங்களில் ஒன்றான டாடா நிறுவனம் மும்பையில் வரும் ஜனவரி 20ஆம் தேதி மெகா மாரத்தான் போட்டி ஒன்றை நடத்தவுள்ளது.

'பேட்ட', 'விஸ்வாசம்' ரிலீஸ் நாளில் ஐஸ்வர்யா ராஜேஷின் கனெக்சன்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'பேட்ட' மற்றும் தல அஜித் நடித்த 'விஸ்வாசம்' ஆகிய இரண்டு திரைப்படங்களும் வரும் ஜனவரி 10ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது என்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது.

நடிகை மடோனாவின் காதலர் ஒரு இசையமைப்பாளரா?

'பிரேமம்' படத்தில் செலின் என்ற கேரக்டரில் நடித்ததன் மூலம் தென்னிந்தியா முழுவதும் பிரபலமான நடிகை மடோனா செபாஸ்டியன்,