பிந்துமாதவி வருகை ஆரவ் மனதை மாற்றியதா? திடுக்கிடும் திருப்பம்

  • IndiaGlitz, [Monday,July 31 2017]

பிக்பாஸ் வீட்டில் தனி ராஜாங்கம் நடத்தி வரும் ஓவியாவை வெல்வதற்கு சக போட்டியாளர்களால் முடியாது என்பதால்தான் பிந்துமாதவி இறக்குமதி செய்யப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. எனினும் ஒவ்வொரு வாரமும் ஓவியாவை அனைத்து பங்கேற்பாளர்களும் நாமினேட் செய்தாலும் ஆரவ் மட்டும் அவருக்கு தொடர்ந்து ஆதரவு கொடுத்து வந்தார். ஆரவ் தன்னை நாமினேட் செய்திருக்க மாட்டார் என்றும் நேற்று ஓவியா நம்பிக்கையுடன் கமலிடம் கூறினார்.

இந்த நிலையில் நேற்று பிந்துமாதவி வந்தவுடனே ஆரவ்விடம் திடீர் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. சற்றுமுன் வெளியான புரமோ வீடியோவில் ஓவியாவை நாமினேட் செய்கிறார் ஆரவ். இது நேயர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதேபோல் பிந்துமாதவி உள்ளே வந்ததும் கட்டிப்பிடித்து மகிழ்ச்சி அடைந்த முதல் நபர் காயத்ரிதான். ஆனால் அந்த காயத்ரியை வெளியேற்றுமாறு பிந்துமாதவி நாமினேட் செய்கிறார்.

சக்தி கொஞ்சம் வெறுப்புடன் 'ஒவ்வொரு வாரமும் நாங்க ஓவியாவை நாமினேட் செய்கிறோம், ஆனால் நீங்க காப்பாத்திக்கிடே இருக்கிங்க, என்னமோ போங்க' என்று கொஞ்சம் சலிப்புடன் மீண்டும் ஓவியாவை நாமினேட் செய்கிறார்.

பிக்பாஸ் வீட்டில் இப்போதுதான் சுவாரஸ்யம் அதிகரித்து திடீர் திடீர் திருப்பங்கள் ஏற்பட தொடங்கியுள்ளது. மீதியுள்ள நாட்களில் என்னென்ன திருப்பங்கள் ஏற்பட போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

More News

ஆதியின் மீசையை முறுக்க வைத்த 'மீசையை முறுக்கு' வசூல்

கோலிவுட் திரையுலகில் இசையமைப்பாளர்கள், நடிகர்களாக ஜொலிப்பதில் ஆச்சரியமில்லை. ஏற்கனவே விஜய் ஆண்டனி, ஜி.வி.பிரகாஷ் ஆகியோர் முன்னணி நடிகர்களாக இருக்கும் நிலையில் தற்போது இந்த பட்டியலில் ஹிப் ஹாப் தமிழா ஆதியும் இடம் பெற்றுள்ளார்...

ஆக்சன் கிங் அர்ஜூனின் 'நிபுணன்' ஓப்பனிங் வசூல் எப்படி?

ஆக்சன்கிங் அர்ஜூன் நடிப்பில் கடந்த வெள்ளியன்று வெளியான 'நிபுணன்' படத்திற்கு நல்ல வரவேற்பும் விமர்சனமும் கிடைத்துள்ளதால் இந்த படத்தின் ஓப்பனிங் வசூல் திருப்திகரமாக இருந்ததாக விநியோகிஸ்தர்கள் தரப்பில் இருந்து செய்தி வெளியாகியுள்ளது...

இரண்டாவது வாரத்திலும் வசூலில் வெற்றி நடை போடும் 'விக்ரம் வேதா'

மாதவன், விஜய்சேதுபதி நடிப்பில் புஷ்கர் காயத்ரி இயக்கிய 'விக்ரம் வேதா' திரைப்படம் கடந்த 21ஆம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அனைத்து ஊடகங்களின் பாசிட்டிவ் ரிசல்ட் மற்றும் சமூகவலைத்தளங்களின் ஆதரவு காரணமாக இந்த படம் முதல் வாரத்தில் நல்ல ஓப்பனிங் வசூலை பெற்றதோடு, இரண்டாவது வாரத்திலும் வசூலில் வெற்றிநடை போட்டு வருகிறது...

ஓவியாவை வெல்வாரா பிந்துமாதவி?

பிக்பாஸ் நிகழ்ச்சியில் நேற்று புதிய பங்கேற்பாளராக நடிகை பிந்துமாதவி களமிறங்கியுள்ளார்...

பிக்பாஸில் பிந்துமாதவி! ஓவியாவுக்கு இனிமேல்தான் போட்டியா?

கமல்ஹாசன் நடத்தி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியை ரெகுலராக பார்த்து கொண்டு வருபவர்களிடம் இந்த போட்டியில் யார் வெற்றி பெறுவார்கள் என்று கேட்டால் உடனே யோசிக்காமல் ஓவியாவின் பெயரை கூறி விடுவார்கள்...