பிக்பாஸ் தமிழ் வெற்றியாளர் இவர்தான்

  • IndiaGlitz, [Sunday,October 01 2017]

கடந்த 100 நாட்களாக பரபரப்பாக ஒளிபரப்பாகிய பிக்பாஸ் தமிழ் நேற்று முடிவுக்கு வந்தது. உலக நாயகன் கமல்ஹாசன் நேற்று முறைப்படி வெற்றியாளரை அறிவித்தார்

முன்னதாக பிரமாண்டமாக நடந்த இறுதிப்போட்டியில் கடைசியில் இருந்த நான்கு போட்டியாளர்களான கணேஷ், ஆரவ், சினேகன், மற்றும் ஹரிஷ் ஆகியோர்களில் இருந்து முதலில் கணேஷ் வெளியேறினார். பின்னர் ஹரிஷூம் வெளியேற வெற்றியாளர் ஆரவ் அல்லது சினேகன் என்பது உறுதியாகியது

இந்த நிலையில் அதிக வாக்குகள் பெற்றவர் என்ற முறையில் பிக்பாஸ் தமிழ் வின்னராக ஆரவ் அறிவிக்கப்பட்டார். அவருக்கு ரூ.50 லட்சத்துக்கான காசோலை வழங்கப்பட்டது.

ஆரவ் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டதும் அவர் மீது காதல் கொண்டிருந்த ஓவியா உள்பட சக போட்டியாளர்கள் அனைவரும் அவருக்கு வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்தனர். IndiaGlitz ஆரவ்வுக்கு தனது பாராட்டுக்களை தெரிவித்து கொள்கிறது.