ஓவியா, உனக்கு ஆரவ் சரியான ஆள் கிடையாது: ஒரு தாயின் மனக்குமுறல்
Send us your feedback to audioarticles@vaarta.com
கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக தொலைக்காட்சி பார்வையாளர்களை கட்டி போட்டு வைத்திருந்த பிக்பாஸ் நிகழ்ச்சி, நேற்று ஓவியா வெளியேறியவுடன் கடும் விமர்சனத்தை பெற்று வருகிறது. குறிப்பாக காதல் தோல்வியால் மன உளைச்சலுக்கு ஆளாகி வெளியேறியுள்ள ஓவியாவின் இந்த நிலைக்கு காரணமான ஆரவ்வுக்கு கடும் கண்டனங்கள் எழுந்து வருகின்றன.
இந்த நிலையில் ஒரு தாய் இதுகுறித்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியதாவது; ஓவியாவின் மனதை கெடுத்து இப்படி ஏமாற்றிவிட்டாரா ஆரவ். ஓவியாவுக்கு எத்தனை பேர் கட் அவுட் வைக்கின்றார்கள். எத்தனை பேர் ஓட்டு போட்டு வருகின்றார்கள். ஓவியா, உனக்கு ஆரவ் சரியான ஆள் கிடையாது. ஆரவ்வுக்கு அந்த ஜூலி தான் சரியான நபர். உன் கால் தூசுக்கு அவர் பெற மாட்டார்.
அதே நேரத்தில் ஓவியாவுக்கு புரிய வைத்த வையாபுரி அய்யாவுக்கும் சினேகன் அவர்களுக்கும் எனது நன்றிகள்' என்று கூறியுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாக மிக வேகமாக பரவி வருகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Contact at support@indiaglitz.com
Comments