ஒரு ஆண்மகன் எப்படி இருக்க வேண்டும்: ஓவியா
Send us your feedback to audioarticles@vaarta.com
பிக்பாஸ் வீட்டில் கடந்த சில வாரங்களாகவே ஓவியாவுக்கு மவுசு அதிகரித்து கொண்டே வருகிறது. அதேபோல் ஆரம்பத்தில் இருந்தே ஓவியா, ஆரவ் ரொமான்ஸ் செய்வதாக காட்சிகள் வந்து கொண்டிருந்தாலும் திடீரென நாம் நண்பர்களாகவே இருக்கலாம் என்று சில நாட்களுக்கு முன் ஓவியா கூறினார்.
இந்த நிலையில் நேற்று மீண்டும் இருவரும் ரொமான்ஸ் உரையாடலை நிகழ்த்தினர். ஆரவ், ஓவியாவிடம் ஆண், பெண் குறித்த ஒரு நல்ல விளக்கத்தை கூறினார். ஆண் என்பவன் இயற்கையிலேயே பெண்ணை விட பலமானவனாக இறைவனால் படைக்கப்பட்டுள்ளான். பெண் மென்மையானவளாக படைக்கப்பட்டுள்ளார். ஆண் தனது பலத்தின் மூலம் கடுமையாக உழைத்து பெண்ணை காப்பாற்ற வேண்டும் அதாவது குடும்பத்தை காப்பாற்ற வேண்டும் என்பதுதான் இதற்கு பொருள். ஆண் பலமாக இருப்பதால் பெண்ணை அடக்கியாள வேண்டும் என்று ஒருசிலர் தவறாக அர்த்தம் செய்து கொள்கின்றனர்' என்ற விளக்கத்தை கொடுத்தார். இதை சுவாரசித்துடன் கேட்டு கொண்டிருந்த ஓவியா, நீ தான் என் குரு' என்று கூறி சிரித்தார்.
மேலும் ஆண்மகன் குறித்து ஓவியா கருத்து கூறும்போது, 'ஒரு ஆண்மகன் வீரமாக, தைரியமாக இருக்க வேண்டும். கண்ணெதிரே ஒரு அநியாயம் நடந்தால் தட்டி கேட்க வேண்டும். நேர்மையானவராக இருக்க வேண்டும்' என்று கூறி என்னை பொருத்தவரையில் நீ அப்படித்தான் நடந்து வருகிறாய்' என்று கூறினார். போகிற போக்கை பார்த்தால் ஓவியா-ஆரவ் இந்த வீட்டை விட்டு ஜோடியாகத்தான் வெளியே போவார்கள் போல தெரிகிறது என்று சமூகவலைத்தளத்தில் கமெண்ட்டுக்கள் வந்து கொண்டிருக்கின்றது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com