'ஆரண்ய காண்டம்' படம் இன்னும் முழுதாக வெளிவரவில்லை: திலீப் சுப்பராயன்

  • IndiaGlitz, [Tuesday,November 27 2018]

இந்திய சினிமாவில் சிறந்த 10 படங்களை தேர்வு செய்தால் அதில் தியாகராஜன் குமாரராஜா இயக்கிய 'ஆரண்ய காண்டம்' திரைப்படம் நிச்சயம் இடம்பெறும். அந்த அளவுக்கு அந்த படம் அனைத்து தரப்பினர்களையும் கவர்ந்தது.

இந்த நிலையில் இந்த படத்தில் உதவி இயக்குனராக பணிபுரிந்த பிரபல ஸ்டண்ட் இயக்குனர் திலீப் சுப்பராஜன் இந்த படம் குறித்து கூறியபோது, 'ஆரண்ய காண்டம்' படத்தின் முழு வடிவம் இன்னும் வெளியாகவில்லை. ரசிகர்கள் பார்த்தது அந்த படத்தின் 60% மட்டுமே. முழு படமும் பார்த்தால் பிரமிப்பாக இருக்கும். குறிப்பாக படத்தின் ஆரம்ப காட்சியே ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட ஒன்பதரை நிமிட காட்சிகள் ஆகும். ஆனால் அந்த காட்சி படத்தில் சில காரணங்களால் வெளியாகவில்லை.

'ஆரண்ய காண்டம்' படத்தின் பெரும்பாலான காட்சிகள் சென்சாரில் வெட்டப்பட்டது. முழுப்படமும் வெளிவந்திருந்தால் இந்திய சினிமாவில் அது ஒரு மறக்க முடியாத படமாக இருந்திருக்கும்' என்று கூறினார்

மேலும் இயக்குனர் தியாகராஜன் குமாரராஜா தற்போது இயக்கி வரும் 'சூப்பர் டீலக்ஸ்' படத்திலும் தான் பணிபுரிந்துள்ளதாகவும், விஜய்சேதுபதியை இந்த படத்தில் அனைவரும் வித்தியாசமான தோற்றத்தில் பார்ப்பீர்கள் என்றும், படம் சூப்பராக வந்துள்ளது என்றும் திலீப் சுப்பராயன் மேலும் கூறினார்.

More News

அரசியல் அவ்வளவு ஈசி அல்ல: கமல், ரஜினிக்கு விஜயசாந்தி அறிவுரை

தமிழகத்தில் நடைபெறவுள்ள அடுத்த சட்டமன்ற பொதுத்தேர்தல் முன்னாள் முதல்வர்கள் ஜெயலலிதா, கருணாநிதி இல்லாத முதல் தேர்தல் ஆகும்.

அஜித் ஒப்புக்கொள்ளாத ஒரே விஷயம்: திலீப் சுப்பராயன்

அஜித் நடித்த 'விஸ்வாசம்' படத்தின் மோஷன் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி விஸ்வாசம் திருவிழா ஆரம்பமாகிவிட்ட நிலையில் இந்த படத்தை பொங்கல் அன்று வரவேற்க இப்பொழுது முதலே அஜித் ரசிகர்கள் தயாராகி வருகின்றனர்.

கேரள முதல்வரிடம் கமல்ஹாசன் கேட்ட உதவி

உலக நாயகன் கமல்ஹாசனும் கேரள முதல்வர் பினராயி விஜயன் அவர்களும் நெருக்கமானவர்கள் என்பது தெரிந்ததே. கமல் அரசியல் கட்சி ஆரம்பிக்கும் முன்னரும், ஆரம்பித்த பின்னரும் பினரயி விஜயன் அவர்களை

பிரபுதேவாவின் 'சார்லி சாப்ளின் 2: சென்சார் தகவல்கள்

பிரபுதேவா, பிரபு நடித்த 'சார்லி சாப்ளின்' திரைப்படம் கடந்த 2002ஆம் ஆண்டு வெளிவந்து வெற்றி பெற்ற நிலையில் இந்த' படத்தின் இரண்டாம் பாகமான 'சார்லி சாப்ளின் 2' திரைப்படம்

25 நாளில் 25வது படம்: விஜய்சேதுபதிகாக சீதக்காதி படக்குழுவின் வீடியோ

'தென்மேற்கு பருவக்காற்று' படத்தின் மூலம் முக்கிய வேடங்களில் நடிக்க தொடங்கிய நடிகர் விஜய்சேதுபதி, வரும் டிசம்பர் 20ஆம் தேதி வெளியாகவுள்ள 'சீதக்காதி' திரைப்படத்துடன் 25 படங்களில் நடித்து முடித்துள்ளார்.