நயன்தாராவின் 'அறம்' ரிலீஸ் தேதி திடீர் மாற்றம்

  • IndiaGlitz, [Sunday,October 22 2017]

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, கலெக்டராக நடித்த 'அறம்' திரைப்படம் வரும் நவம்பர் 3ஆம் தேதி வெளியாகும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது இந்த படத்தின் ரிலீஸ் தேதி மாற்றப்பட்டுள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

சமீபத்தில் புதிய திரைப்படங்கள் ரிலீஸ் இல்லை என்று தயாரிப்பாளர் சங்கம் எடுத்த முடிவின் காரணமாக அக்டோபர் 6ஆம் தேதி ரிலீஸ்  ஆக வேண்டிய திரைப்படங்கள் ஒத்தி வைக்கப்பட்டன. இந்த நிலையில் அக்டோபர் 6ஆம் தேதி ரிலீஸ் ஆகவேண்டிய திரைப்படங்கள் நவம்பர் 3ல் வெளியாகும் என்றும் அதற்கு மற்ற படங்களின் தயாரிப்பாளர்கள் ஒத்துழைக்க வேண்டும் என்று தயாரிப்பாளர் சங்கம் அறிவித்திருந்தது.

இந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட 'அறம்' தயாரிப்பு நிறுவனம், படத்தின் ரிலீஸ் தேதியை ஒருவாரம் ஒத்தி வைத்துள்ளது. அதாவது நவம்பர் 3ல் இருந்து நவம்பர் 10க்கு ஒத்தி வைத்துள்ளது.

நயன்தாரா, விக்னேஷ், ரமேஷ், சுனுலட்சமி உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை மிஞ்சூர் கோபி இயக்கியுள்ளார். ஜிப்ரான் இசையமைத்துள்ள இந்த படத்திற்கு ஓம்பிரகாஷ் ஒளிப்பதிவும், கோபிகிருஷ்ணா படத்தொகுப்பும் செய்துள்ளனர்.