ஏன் இதுவரை இதனை செய்யவில்லை? ஆழ்துளை கிணறு சம்பவம் குறித்து 'அறம்' இயக்குனர் கேள்வி!
- IndiaGlitz, [Saturday,October 26 2019]
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்த அறம் என்ற திரைப்படம் ஆழ்துளை குழாய் கிணறு ஒன்றில் விழுந்த குழந்தையை மீட்பது குறித்த கதையம்சம் கொண்டது என்பதும், இந்த படத்தை இயக்கிய இயக்குனர் கோபி நாயனார் அவர்களுக்கு பாராட்டுகள் குவிந்து என்பதும் இந்தப் படம் நல்ல வரவேற்பை பெற்றது என்பதும் தெரிந்ததே
இந்த நிலையில் திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே சுர்ஜித் என்ற 2 வயது குழந்தை ஆழ்துளை கிணற்றில் விழுந்து மீட்க முடியாமல் உள்ள நிலையில் இந்த சம்பவம் குறித்து பலரும் தங்களது கருத்தை தெரிவித்து வருகின்றனர் இந்த நிலையில் இந்த சம்பவம் குறித்த அறம் படம் எடுத்த இயக்குனர் கோபி நயினார் அவர்கள் கூறியதாவது
ராக்கெட்டுகள் மேல் இருக்கும் கவனம், சாதாரண மக்களுக்கும் பயன்படும் விஞ்ஞானத்திலும் இருக்க வேண்டும் என்றும், ஆழ்துளை கிணறுகளில் சிக்கும் குழந்தைகளை மீட்க, புதிய இயந்திரங்களை கண்டுபிடித்து தீயணைப்பு மற்றும் மீட்புத்துறைக்கு வழங்க வேண்டும் என்றும், ஜேசிபி போன்ற இயந்திரங்கள், குழந்தையை மீட்பதற்கான இயந்திரம் கிடையாது என்றும், ஆழ்துளை கிணறுகளில் சிக்கிய குழந்தைகளை மீட்க ஏன் புதிய இயந்திரங்களை கண்டுபிடிக்கவில்லை என்றும் கூறியுள்ளார்.