பிரபல நடிகரின் இசை வெளியீட்டு விழா ஒத்திவைப்பு

  • IndiaGlitz, [Monday,July 30 2018]

அரசியல் உலகில் மட்டுமின்றி திரையுலகிலும் சாதனை புரிந்த திமுக தலைவர் கருணாநிதி உடல்நலமின்றி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதால் தமிழகமே ஒருவித அசாதாரண சூழ்நிலையில் உள்ளது.

இந்த நிலையில் வரும் ஆகஸ்ட் 1ஆம் தேதி நடைபெறவிருந்த பிரபல நடிகர், இயக்குனர் சமுத்திரக்கனியின் 'ஆண்தேவதை' படத்தின் இசை வெளியிட்டு விழா ஆகஸ்ட் 10ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதனை உறுதி செய்யும் வகையில் ஒன்று பத்தாகிறது என ஒரு புதிய போஸ்டர் ஒன்று வெளியாகியுள்ளது.

சமுத்திரக்கனி, ரம்யா பாண்டியன், அறந்தாங்கி நிஷா, ராதாரவி, இளவரசு, சுஜா, காளிவெங்கட் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை தாமிரா இயக்கியுள்ளார். ஜிப்ரான் இசையில் விஜய் மில்டன் ஒளிப்பதிவில், காசி விஸ்வநாதன் படத்தொகுப்பில் உருவான இந்த படத்தை சிகரம் சினிமாஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

More News

காவேரி மருத்துவமனைக்கு ரஜினி செல்வது எப்போது? புதிய தகவல்

திமுக தலைவர் கருணாநிதி கடந்த மூன்று நாட்களாக சென்னை காவேரி மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நிலை சிகிச்சைக்கு பின்னர் சீரானது. 

லைகா நிறுவனத்தின் அடுத்த மாஸ் படம் இதுதான்: அதிகாரபூர்வ அறிவிப்பு

கோலிவுட் திரையுலகில் கிட்டத்தட்ட பெரிய நடிகர்கள் அனைவருமே லைகா நிறுவனம் தயாரிக்கும் படத்தில் நடித்து வருகின்றனர். ரஜினியின் '2.0', கமல்ஹாசனின் 'இந்தியன் 2' ஆகிய படங்களும் இதில் அடங்கும்

ஆரவ் படத்தின் நாயகி ஓவியாவா? ஆர்மியினர் அதிர்ச்சி

பிக்பாஸ் நிகழ்ச்சியின் வின்னரான ஆரவ்வும், மக்களின் வின்னரான ஓவியாவும் காதலித்து வருவதாக கூறப்பட்டாலும் இந்த செய்தியை இன்னும் இருவரும் உறுதி செய்யவில்லை.

ஜோதிகா பிறந்த நாளில் 'காற்றின் மொழி' படக்குழுவினர் தரும் பரிசு

ஜோதிகா நடிப்பில் இயக்குனர் ராதாமோகன் இயக்கி வரும் 'காற்றின் மொழி' திரைப்படத்தில் ஜோதிகா சம்பந்தபப்ட்ட காட்சிகளின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது என்பதை பார்த்தோம்.

காவேரி மருத்துவமனையில் சிவகுமார்-சூர்யா

திமுக தலைவர் கருணாநிதி கடந்த மூன்று நாட்களாக சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் உடல்நலக்கோளாறு காரணமாக தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.