அப்பாவாக நடித்தவருடன் திருமணமா? பரபரப்பு விளக்கம் அளித்த பாலிவுட் நடிகை!
Send us your feedback to audioarticles@vaarta.com
சமீபகாலமாக பாலிவுட் சினிமா வட்டாரத்தில் நடிகர் அமீர்கான் பற்றிய தகவல்கள்தான் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. இரண்டுமுறை திருமண வாழ்க்கையை முறித்துக்கொண்ட அவர் தற்போது “தங்கல்“ படத்தில் தனக்கு மகளாக நடித்த பாத்திமா சனா ஷேக்கை திருமணம் செய்துகொள்ள இருக்கிறார் என்பது போன்ற செய்திகள் உலாவந்தன. இந்நிலையில் நடிகை சனா அது முற்றிலும் வதந்தி என்று விளக்கம் அளித்திருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகராக வலம்வரும் நடிகர் அமீர்கான் கடந்த 1986 ஆம் ஆண்டு ரீனா தத்தா என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். கடந்த 2002 ஆம் ஆண்டு இந்தத் திருமணத்தை முறித்துக்கொண்ட அவருக்கு இளம்வயதில் ஒரு மகள் இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அதேபோல நடிகர் அமீர்கான் நடிப்பில் கடந்த 2001 ஆம் ஆண்டு வெளியாகி 7 தேசிய விருது மற்றும் இந்தியா சார்பில் ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்ட திரைப்படம் “லகான்“. இந்தத் திரைப்படத்தின் உதவி இயக்குநராக பணியாற்றிய கிரண் ராவ் என்பவரை நடிகர் அமீர்கான் கடந்த 2005 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்நிலையில் 16 ஆண்டுகால திருமணபந்தம் கடந்த ஜுலை மாதம் விவாகரத்தில் முடிந்ததும் குறிப்பிடத்தக்கது.
இதைத்தொடர்ந்து “தங்கல்“ படத்தில் மகளாக நடித்த பாத்திமா சனா ஷேக்கை நடிகர் அமீர்கான் 3 ஆவதாகத் திருமணம் செய்துகொள்ள போகிறார். “லால் சிங் சட்டா“ திரைப்படத்தின் வெளியீட்டிற்கு பிறகு இதுகுறித்த அறிவிப்பு வெளிவரும் என்பதுபோன்ற வதந்திகள் தற்போது உலா வருகின்றன. இதையடுத்து நடிகை பாத்திமா சனா ஷேக், தனது நெருங்கிய நண்பர்களிடம் இந்தத் தகவல் முற்றிலும் வதந்தி என்று கூறியதாக இந்தியா டுடே தகவல் வெளியிட்டு இருக்கிறது.
அதில், நான் இதுவரை சந்திக்காத ஒருசில பேர் என்னைப்பற்றி எழுதுகிறார்கள். இதில் உண்மை இருக்கிறதா என்றுகூட அவர்களுக்குத் தெரியாது. இதைப் படிப்பவர்கள் நான் “நல்லவர் இல்லை“ என்று நினைக்கிறார்கள். அந்த நபரிடம் என்னைக் கேளுங்கள் நான் உங்களுக்கு பதில் தருகிறேன் என்று சொல்ல வேண்டும் என்று நினைக்கத் தோன்றுகிறது.
இது என்னைத் தொந்தரவு செய்கிறது. ஏனென்றால் மக்கள் என்னை தவறாக கருதுவதை நான் விரும்பவில்லை என்று நடிகை சானா கூறிய கருத்து தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி இருக்கிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com
Comments